பொடுகு தொல்லை நீங்க இயற்கை வழிகள் | Dandruff Home Remedies in Tamil

Dandruff Home Remedies in Tamil

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் | Dandruff Poga Tips in Tamil

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் நீளமான, அடர்த்தியான முடி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். முடி இருந்தால் கண்டிப்பாக பேன், பொடுகு இருக்குமல்லவா அது பலருக்கும் தீராத தொல்லையை தருகிறது. பொடுகு வருவதற்கு ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடு, வறண்ட சருமம், உணவு பழக்கம், தலையை சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்ற பல காரணங்கள் இருக்கலாம். சரி பொடுகு வந்துவிட்டது அதை நீக்குவதற்கு என்ன வழி என்று தானே கேட்கிறீர்கள், இதோ பொடுகு தொல்லையை நீக்குவதற்கான இயற்கை வழிமுறையை கீழே பதிவிட்டுள்ளோம் அதை படித்து பயன்பெறுங்கள்..!

தயிர்:

dandruff poga tips in tamil

  • பொடுகு நீங்க எளிய முறை: தலையில் உள்ள பொடுகு நீங்குவதற்கு தயிர் ஒரு சிறந்த இயற்கை வழி என்றே சொல்லலாம். பொடுகு தொல்லை உள்ளவர்கள் தயிரை நன்றாக தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு மணி நேரம் கழித்து தலையை மைல்டான ஷாம்புவை பயன்படுத்தி அலசி கொள்ளவும். தயிர் உடல் உஷ்ணத்தை குறைத்து, முடிக்கு பளபளப்பை கொடுக்கும்.
  • சைனஸ், ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம்.

வெள்ளரிக்காய்:

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

  • பொடுகு நீங்க இயற்கை மருத்துவம்: வெள்ளரிக்காயை அதில் உள்ள மேற்புற தோலை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக நறுக்கி அரைத்து கொள்ளவும்.
  • பின் அதில் உள்ள சாரை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளுங்கள். வெள்ளரிக்காய் சாறுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
  • பின் இதை தலையில் நன்றாக தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின்னர் முடியை அலசி கொள்ளவும்.

பாசிப்பயறு: 

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

  • Dandruff Poga Tips in Tamil: ஒரு பௌலில் தேவையான அளவு பாசிப்பயறு எடுத்து அதனை மாவாக்கி கொள்ளவும்.
  • பின் பாசிப்பயறு மாவில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
  • பின் இதை தலையில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின்னர் தலையை தூய நீரினால் அலசி கொள்ளவும். இது உங்கள் முடியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

வேப்பிலை பவுடர்:

podugu thollai neenga

  • poduku treatment tamil: பொடுகு நீங்குவதற்கான இயற்கை வழிகளில் மிக முக்கியமான ஒன்று வேப்பிலை. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு வேப்பிலை பவுடரை 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பின் அதை வடிகட்டி, ஆறவைத்து தலை குளிக்கும்போது இதை வைத்து முடியை அலசவும். இவ்வாறு செய்தால் பொடுகு விரைவில் நீங்கும்.
பொடுகு தொல்லையிலிருந்து விடுபட டிப்ஸ் !!!

கஞ்சி:

podugu thollai neenga enna seiya vendum

  • Dandruff Home Remedies in Tamil: தலைக்கு இயற்கையாகவே மிகவும் நல்லது சாதம் வடித்த கஞ்சி. இது உடல் சூட்டை குறைத்து முடி அடர்த்தியாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
  • தலை குளிக்கும்போது சாதம் வடித்த கஞ்சியை தலையில் தேய்த்து குளித்தால் (ஆறிய பிறகு கஞ்சியை பயன்படுத்தவும்) பொடுகு விரைவில் மறைந்து விடும்.

எலுமிச்சை சாறு:

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

Dandruff Home Remedies in Tamil: எலுமிச்சை சாறை, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலையின் வேர்ப்பகுதியில் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும். 15 நிமிடம் ஊறவைத்து பின்னர் தலையை தூய நீரினால் அலசி கொள்ளவும்.

இது பொடுகு நீங்கவும், முடி உதிராமல் இருப்பதற்கும் உதவியாக இருக்கும்.

குறிப்பு: எலுமிச்சை சாறை மட்டும் தனியாக தலையில் தேய்க்க கூடாது, அதிக நேரம் தலையில் எலுமிச்சை சாறை ஊறவைக்க கூடாது.

100% பொடுகு நீங்க எளிய வழிகள்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!