தலையில் செதில் செதிலாக பொடுகு வருகிறதா? கவலையை விடுங்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!

Advertisement

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் | Dandruff Home Remedies in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பொடுகு தொல்லை நீங்க அக்காலத்தில் பாட்டிகள் வீட்டில் பயன்படுத்திய வைத்தியம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சிலருக்கு தலை எப்பொழுதும் அரித்துக் கொண்டே இருக்கும். எல்லா வகையான ஷாம்பையும் ட்ரை செய்து பார்த்திருப்பார்கள் இருந்தாலும் அரிப்பு மட்டும் போகாது. இதற்கு முக்கிய காரணம் நமது தலையில் இருக்கும் பொடுகு தான். இந்த பொடுகு பிரச்சனை சிலருக்கு முகத்தில் அதிக பருக்கள் தோன்றவும் காரணமாக இருக்கிறது. இந்தப் பொடுகு தொல்லையை எப்படித்தான் போக்குவது என்று கவலைபடுகிறீர்களா? கவலையை விடுங்க பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட பின்வரும் வழிகளை பின்பற்றுங்க.. போதும் கூடிய விரைவில் பொடுகு பிரச்சனை சரியாக ஆரம்பிக்கும்.

Dandruff Home Remedies in Tamil | பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

  • ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பிறகு தலையை நன்கு அலசினால் பொடுகு மறைந்து விடும். இந்த முறையை வாரத்தில் ஒருமுறை செய்து வரவும்.
  • நாட்டுமருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடி செய்து நீரில் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 வாரம் இந்த எண்ணெயை தடவினால் முடி கொட்டுவது, பொடுகு தொல்லை இன்னும் நிறைய பிரச்சனைக்கு மருந்து இது தான்..!

  • வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டிக்கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்ற அனைத்து நீங்கிவிடும்.
  • பசலை கீரையை அரைத்து தலையில் செய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
  • அருகம்பில் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
  • வேப்பிலை சாறு, துளசி சாறு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
  • தேங்காய் எண்ணெயுடன், வேப்பெண்ணெய்யை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
  • வேப்பிலை சிறிதளவு, மிளகு சிறிதளவு ஆகிய சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஒருமணி நேரம் கழித்து தலை அலசவும், இவ்வாறு செய்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
  • அரைத்த மருதாணி இலையுடன் கொஞ்சம் தயிர் மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்றாக கலந்து தலையில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தலை குளிக்கவும். இப்படி செய்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
  • ஆலிவு எண்ணெயுடன் இஞ்சி சாறு சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து  சிறிது நேரம் ஊற வைத்து பிறகு தலை அலசினால் பொடுகு தொல்லை நீங்கும்.
  • வேப்பம் பூ 50 கிராம், எடுத்துக்கொள்ளுங்கள் அதனை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சவும். பின் இளம் சூட்டில் இந்த எண்ணெயை தலையில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தலை அலசவும். இப்படி செய்தால் பொடுகு பிரச்சனை சரியாகும்.
  • தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைக்கவும். பின் அந்த எண்ணெயை தொடர்ந்து தொடர்ந்து தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொடுகு பிரச்சனை அதிகம் இருக்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரே மாதத்தில் பொடுகு தொல்லை அடியோடு நீங்கிவிடும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement