பொடுகு தொல்லையை நிரந்தரமாக நீக்க இந்த 2 இலை மட்டும் போதும்..!

Advertisement

Dandruff Home Remedy

இந்த சுற்று சூழல் மாசுபாட்டின் காரணமாக உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இன்றைய நிலையில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்குமே பொடுகு பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. இந்த பொடுகு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நாளடைவில் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பொடுகு பிரச்சனையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே விரட்டலாம். அது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Dandruff Home Remedy in Tamil:

Dandruff Home Remedy

  1. வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  2. செம்பருத்தி இலை – முடிக்கு தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் – 1 பிஞ்

செம்பருத்தி இலை:

செம்பருத்தி இலையை உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளவும். பின் அதை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

பின் ஒரு கைப்பிடி அளவு அல்லது உங்களுக்கு தேவையான அளவு வேப்பிலையை எடுத்து கொள்ள வேண்டும்.

பின் இது இரண்டையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொள்ளவும். இதனுடன் ஒரு பிஞ் அளவு மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை பொடுகு பிரச்சனையை நீக்கி பொடுகு வராமல் தடுக்கிறது. செம்பருத்தி இலை பொடுகு தொல்லையை விரட்டி முடி வளர உதவி செய்கிறது.

பொடுகு பிரச்சனை அதிகம் இருக்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரே மாதத்தில் பொடுகு தொல்லை அடியோடு நீங்கிவிடும்..!

முடிக்கு அப்ளை செய்யும் முறை:

முடிக்கு அப்ளை செய்யும் முறை

நாம் தலைக்கு எந்த பேஸ்ட் அப்ளை செய்தாலும் தலையில் எண்ணெய் பச்சை இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் தலைக்கு ஏதும் பேஸ்ட் அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் முதல் நாளே தலையில் எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். மறுநாள் நீங்கள் பேஸ்டை அப்ளை செய்து கொள்ளலாம்.

அதுபோல இந்த பேஸ்டை உங்கள் தலையின் அடிப்பகுதியில் அப்ளை செய்து 5 நிமிடம் வரை நன்றாக தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த பேஸ்ட் உங்கள் தலையில் 20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் தலையை நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசி கொள்ளலாம்.

இதுபோல வாரத்திற்கு 1 முறை என்று 1 மாதம் செய்து வந்தால் பொடுகு தொல்லை அடியோடு நீங்கிவிடும். இந்த முறையை நீங்கள் 1 முறை ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.

பொடுகு பிரச்சனையை சரி செய்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த இந்த ஹேர் பேக் மட்டும் போதும்..!
உங்களின் தலையில் உள்ள பொடுகு நீங்கி தலைமுடி நன்கு வளர இதை ட்ரை பண்ணுங்க..!

 

இதையும் படித்துபாருங்கள்=> நிரந்தரமாக பொடுகு தொல்லை நீங்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement