தலையில் இருக்கும் பொடுகினை நீக்குவதற்கு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்க..!

Advertisement

Dandruff Home Remedies  

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முடி வளரவே இல்லை என்பது தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இவ்வாறு நாம் முடி வளரவில்லை என்று கஷ்டப்படும் போது மற்றொரு பிரச்சனையும் நமக்கு வரும். அது வேறு ஒன்றும் இல்லை பொடுகு தொல்லை தான். பொடுகு பிரச்சனை வந்தால் தலையில் இருக்கும் கொஞ்சம் முடியும் அதிகமாக உதிர ஆரம்பமாகும். சரி பொடுகு தொல்லையினை வேறு எப்படி தான் சரிசெய்வது என்று நீங்கள் யோசிக்கலாம். அதனை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது தலையில் இருக்கும் நரைமுடி பிரச்சனையினை ஹேர் பேக் மூலமாக எப்படி போக்குவது என்று பதிவை படித்து பார்க்கலாம் வாருங்கள்..!

பொடுகு வர காரணம்:

நம்முடைய தலையில் அழுக்குகள் நிறைய படிந்து இருப்பதால் பொடுகு தொல்லை வருகிறது. அதேபோல் தலையில் பூஞ்சை தொற்று ஏற்படுவதாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதினாலும் பொடுகு வருகிறது.

அதுமட்டும் இல்லாமல் உங்களுடைய முடிக்கு ஏற்ற அளவு ஷாம்பு உபயோகப்படுத்தினால் மட்டுமே அழுக்கு நிரந்தமாக போய்விடும். இதனால் பொடுகு தொல்லையும் இருக்காது.

மேலும் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை அழுக்கு சேராமல் தலை குளித்தால் பொடுகு தொல்லை வராமல் இருக்கும்.

பொடுகு பிரச்சனை தீர:

  • கொய்யா இலை- 1 கைப்பிடி அளவு 
  • துளசி- 1 கைப்பிடி அளவு 
  • கடலை மாவு- 5 ஸ்பூன் 

பொடுகு பிரச்சனையினை சரிசெய்ய மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை முதலில் எடுத்துவைத்து கொள்ளுங்கள்.

ஈர், பேன், பொடுகு தொல்லை நீங்க இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள் 100% ரிசல்ட் கிடைக்கும்.

பொடுகு நீங்க:

முதலில் எடுத்துவைத்துள்ள துளசி இலை மற்றும் கொய்யா இலையினை நன்றாக தண்ணீரில் சுத்தும் செய்து கொள்ளுங்கள். அதில் பூச்சிகள் ஏதேனும் இருந்தாலும் அதனை நீக்கிவிடுங்கள்.

அதன் பிறகு ஒரு மிக்சி ஜாரில் அலசி வைத்துள்ள 2 விதமான இலைகளையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்ற பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டினை ஒரு காட்டன் துணியில் சேர்த்து நன்றாக சாறு பிழிந்து ஒரு பவுலில் வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து அந்த பவுலில் 5 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் பொடுகினை போகக்கூடிய ஹேர் பேக் தயார்.

பயன்படுத்தும் முறை:

ஹேர் பேக் அப்ளை செய்வதற்கு முன்பாக தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தடவி சிக்கு இல்லாமல் சீவி கொள்ளுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

இப்போது 2 நிமிடம் வரை மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். 20 நிமிடம் ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு முடியினை அலசி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும் பொடுகு குறைந்து விடும். மேலும் பொடுகு உங்களுக்கு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது என்றால் 2 வாரத்திற்கு 1 முறை கூட பயன்படுத்தலாம்.

பொடுகு பிரச்சனையை சரி செய்ய இந்த ஷாம்பூ போதுமா…இத்தனை நாளா தெரியாம போச்சே..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement