அட ஒரு இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க Magical Tips..!

Advertisement

அட ஒரு இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க Magical Tips..! karuvalayam poga tips tamil..!

இன்று ஏராளமானோர் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சனை தான் கருவளையங்கள்(karuvalyam). இந்த கருவளையங்கள்(dark circles) பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு வரும். அதில் தூக்கமின்மை, அதிகமாக புகைப் பிடித்தல், ஆரோக்கியமற்ற டயட் மேற்கொள்வது, சுற்றுசூழல் மாசுபாடு போன்றவை குறிப்பிடத்தக்கன.

இப்படிப்பட்ட கருவளையங்களை (dark circles tips) சரியான பராமரிப்பின் மூலம் (karuvalyam) நிரந்தரமாக போக்க முடியும். அதுவும் நம் வீட்டில் உள்ள சில எளிமையான பொருள்களே இதற்கு போதுமானது.

newவீட்டுல வெண்டைக்காய் இருந்தால் இதை செய்து பாருங்கள்..!

ஓகே வாங்க ப்ரண்ட்ஸ் அது எப்படினு நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

1. கற்றாழை :

கற்றாழை சருமத்தில் உள்ள வறட்சிகளை போக்கி, சரும செல்களுக்கு ஊட்டச்சத்துகளை அளித்து, கண்களுக்கு அடியில் உள்ள சருமத்தை இறுக்கமடையச் செய்யும்.

அதற்கு அற்புதமான கற்றாழையை வெட்டி அதனுள்ள ஜெல்லை எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அதை கண்களின்(dark circles) அடியில் தடவி மசாஜ் செய்து, 10 அல்லது 15 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின் நீரில் நனைத்த பஞ்சி உருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, விரைவில் உங்களுக்கு நல்ல பலன் தரும் .

2. புதினா இலைகள் :

புதினா இலைகளில் உள்ள வைட்டமின் ‘சி’ கண்களை சுற்றி உள்ள கருவளையங்களை போக்க பெரிதும் உதவுகின்றது. சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள உதவுகின்றது. அதற்கு ஒரு கையளவு புதினா இலைகளை நீர் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை கண்களை(dark circles) சுற்றி தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.

newஒரே இரவில் ஆண்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்..! 100% Natural beauty tips in tamil..!

3. மஞ்சள் :

மஞ்சளில் சருமத்தை பாதுகாக்கும் ஏஜென்ட்கள் அதிகம். சுத்தமான மஞ்சள் தூளில் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து அந்த கலவையை கண்களின் அடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர பெரிய மாறுதல் தெரியும் . இது போல வாரம் இரு முறை மட்டும் செய்தால் போதுமானது.

4. உருளைக் கிழங்கு :

உருளைக்கிழங்கில் உள்ள பிளீச்சிங் பண்புகள் சரும கருமையை போக்க உதவுகின்றது . அதற்கு உருளைக்கிழங்கை பிரிட்ஜ்ல் ஒரு மணி நேரம் வைத்து அதன் தோலை நீக்கி துருவி கண்களின் அடியில் தினமும் தூங்கும் போது வைத்து உறங்குங்கள். பிறகு மறு நாள் காலை முகத்தை கழுவுங்கள். இப்படி செய்யும் போது கருமை(dark circles)நீங்கி கண்களை சுற்றி உள்ள வீக்கத்தையும் குறைகின்றது.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement