வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்து விடுகிறதா..! அப்போ உருளைக்கிழங்கை இப்படி பயன்படுத்துங்க..!

Updated On: July 31, 2024 12:28 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

கரும்புள்ளிகள் மறைய | Dark Spots Removal Face Pack

ஹலோ பிரண்ட்ஸ்..! பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். ஆனால் அந்த பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது. அதுபோல் பருக்கள் வருவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். அதாவது முக அழகை மேம்படுத்துவதற்காக கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவது, சோப்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவது போன்ற செயல்களால் தான் சருமத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வருகிறது. அதுபோல இந்த பிரச்சனைகளை நாமும் இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்று கரும்புள்ளிகளை மாயமாய் மறைய செய்யும் பேஸ் பேக்கை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Dark Spots Removal Face Pack At Home in Tamil:

  1. உருளைக்கிழங்கு –
  2. அரிசிமாவு – 2 டேபிள் ஸ்பூன்
  3. தேன் – 1 டேபிள் ஸ்பூன்

உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும்: 

உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும்

முதலில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

எப்படீங்க இவ்ளோ முடிய வளர்த்தீங்கன்னு மத்தவங்க கேட்குற அளவுக்கு முடி வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்

பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதை வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.

 உருளைக்கிழங்கில் இருக்கும் சத்துக்கள் கரும்புள்ளிகளை மாயமாய் மறைய செய்ய உதவுகிறது. மேலும் முக கருமையை நீக்கி முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்து கொள்கிறது.  

பத்தே நாட்களில் உங்க முடி கிடுகிடுன்னு வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்

அரிசி மாவு எடுத்து கொள்ளவும்:

அரிசி மாவு எடுத்து கொள்ளவும்

அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அதில் அரிசிமாவு 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் நாம் வடிகட்டி எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சாறை ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் தேன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஊற்றி பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் கரும்புள்ளிகளை நீக்கும் பேஸ் பேக் ரெடி..!

👉 2 முறை அப்ளை செய்தால் போதும் முடி கட்டுக்கடங்காமல் காடுபோல் வளர்ந்துவிடும்

அப்ளை செய்யும் முறை:

அப்ளை செய்யும் முறை

இந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்தை அப்ளை செய்ய வேண்டும். இந்த பேஸ் பேக் உங்கள் முகத்தில் குறைந்தது 15 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்தும் விடும்.

👉 வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now