உங்கள் முகத்தை பளபளப்பாக இந்த டிப்ஸ்-யை செய்து பாருங்கள்..!

Advertisement

Dosa Batter Tips For Skin Whitening In Tamil

இளைஞர்கள் தங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்பதற்காக விளம்பரங்களை பார்த்து சிறந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். முகம் பராமரிக்கும் பொருட்கள் என்று கடைகளில் பாக்கெட் ராசயங்கள் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் நீங்கள் சில பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். சில நபர்கள் வீட்டிலேயே face pack தயாரித்து பயன்படுத்துகிறார்கள். வீட்டிலேயே நாம் தயாரித்து பயன்படுத்தும் face pack ஆரோக்கியமாகவும் முகத்துக்கு நன்மை விளைவிப்பதாகவும் இருக்கிறது. எனவே இந்த பதிவில் சிறந்த dosa batter (தோசை மாவு) face pack செய்வது எப்படி என்பதையும் அதன் நன்மைகளையும் பற்றி இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வீட்டிலேயே ஷாம்பு தயாரிப்பது எப்படி.?

தோசை மாவு Face Pack செய்முறை:

தேவையான பொருட்கள்:

  • அரிசி
  • கழுவிய உளுத்தம் பருப்பு
  • உப்பு
  • தேன்
  • பால்

செய்முறை:

  • முதலில் அரிசி, வெந்தயம் மற்றும் உளுத்தம் பருப்பை தனி தனி பாத்திரத்தில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அரை மணி நேரம் கழித்து உளுத்தம் பருப்பை மிக்சியில்,நீர் அளவாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • இதே போல் அரிசியை மிக்சியில் கரடு முரடாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கலந்து இரவு முழுவதும் ஒரு மூடி போட்டு அப்படியே வைக்கவும். தோசை மாவிற்கான செய்முறையும் இதே தான்.
  • தோசை மாவுடன் தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளவும்.
  • தயார் செய்துள்ள மாவை, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்கு தடவவும்.
  • 20 முதல் 30 நிமிடங்கள் உலர்த்திய பிறகு, கைகளால் முகத்தை மெதுவாக தேய்த்து கழுவிடவும்.

தோசை மாவு Face Pack நன்மைகள்:

முக சுருக்கம்:

முக சுருக்கத்திற்கு மிக நல்ல தீர்வு தோசை மாவு face pack தான். சருமத்தில் சுருக்கம் இருக்கும் நபர்கள் முகத்தை தோசை மாவு கொண்டு மாசாஜ், பின்னர் குளிர்ந்த நீரில் கழுவிடவும். இதனால் உங்கள் முகம் சுருக்கம் இல்லாமல் இளமை தோற்றத்தை தரும்.

முகப்பரு:

முகப்பருக்களுக்கு கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையான தோசை மாவு face pack பயன்படுத்தினால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.

சருமத்தை சுத்தப்படுத்த:

உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துவதற்கு சிறந்த டிப்ஸ் தோசை மாவு. இதனை பயன்படுத்தி உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவாகும்.

இறந்த செல்கள்:

தோசை மாவு என்பது இறந்த சரும செல்களை நீக்க உதவுவதில் சிறந்தது. இதை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் புள்ளிகள் நீங்கி முகம் பொலிவடையும்.

தோல் இறுக்குதல்:

தளர்வான சருமத்தை சரிசெய்ய தோசை மாவை பயன்படுத்தலாம். முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிடவும். மேலும், இது தோல் எரிச்சலையும் நீக்கும்.

பொலிவான சருமத்திற்கு வெண்ணெய்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement