Double Hair Growth Oil in Tamil
பனிக்காலம் வந்து விட்டால் முகத்தில் பனி பத்து வரும் அது முகத்தின் அழகையே கெடுத்து விடும். அது ஒரு பக்கம் இருந்தாலும், தலை முடி கொத்து கொத்தகா கொட்டும், காரணம் அது இயற்கையால் நடக்கும் என்றாலும். தலை முடி கொட்டுகிறது நம்முடையது அல்லவா அதை சரியாக பார்த்துகொள்வது நம்முடைய கடமை அல்லவா நம்முடைய தலைமுடியை எப்படி பாதுகாப்பது என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
Double Hair Growth Oil in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
- கிராம்பு – 5
- கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் 25 கிராம்
- ஆலிவ் ஆயில் – 50 கிராம்
செய்முறை:
ஸ்டேப்: 1
முதலில் கை உரலை எடுத்துக்கொள்ளவும். அதில் நாம் ஏடுத்துவைத்த வெந்தயம் கருஞ்சீரகம், கிராம்பு மூன்றையில் சேர்த்து நன்கு பொடி செய்யவும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 நரைமுடி பிரச்சனையா இனி கவலை வேண்டாம் இந்த ஹேர் டையை ட்ரை பண்ணுங்க..!
ஸ்டேப்: 2
இந்த பொருட்கள் அனைத்தும் கொஞ்சமாக இருப்பதால் அதனை அரைக்க முடியாது ஆகவே தான் உரலில் இடுகிறோம், உங்களால் அரைக்க முடிந்தால் அரைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
அரைத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும். பின்பு அதில் 25 கிராம் தேங்காய் எண்ணெயை ஊற்றவும், அதனுடன் 50 கிராம் ஆலிவ் ஆயில் ஊற்றவும். அனைத்தையும் ஒரு முறை கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வெயிலில் வைக்கவும்.
ஒரே வாரத்தில் நரை முடி கருப்பாகவும் அதிசயம்..! இந்த எண்ணெய் மட்டும் தடவி பாருங்கள்..!
ஸ்டேப்: 4
வெயில் இல்லையென்றால் வெளிச்சம் இல்லாத இடத்தில் வைக்கவும். ஒரு வாரம் அப்படியே வைத்திருக்கவும்.
ஸ்டேப்: 5
உங்களுக்கு உடனே வேண்டுமென்றால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும். அதன் பின் எண்ணெய் இருக்கும் கிண்ணத்தை அந்த பாத்திரத்திற்குள் வைக்கவும். ஓரளவு சூடானதும் அதனை எடுத்து ஆறவைக்கவும்.
பயன்படுத்தும் முறை:
முதலில் தலையை விரித்துக்கொள்ளவும், பின்பு ஒரு ஒரு பக்கமாக கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடியை எடுத்து அதன் வேர்ப்பகுதியில் தேய்க்கவும். அனைத்து பக்கமும் தேய்க்கவும். தலைமுடி மிருதுவாக இருக்க தலைமுடி முறுவதும் தேய்க்கவும். இவ்வாறு தேய்ப்பதினால் தலைமுடி உதிர்வது நின்று, தலை முடி அடர்த்தியாக நிலமாக வளர ஆரம்பிக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |