Drumstick Oil Benefits In Tamil
இன்றைய பதிவில் முருங்கை எண்ணெய்யின் பயன்கள் பற்றி பார்க்க போகிறோம். நம் அனைவருக்கும் முருங்கை கீரை மற்றும் முருங்கை காய் ஆகியவற்றில் அதிக நன்மைகள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் முருங்கை எண்ணெய்யை பற்றி தெரிந்திருக்க இயலாது. முருங்கை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் முருங்கை எண்ணெய் முதுமையான தோற்றத்தை தடுத்து இளமையான தோற்றத்தை தக்க வைக்கிறது. முருங்கை விதையில் இருந்து தயாரிக்கப்படும் முருங்கை எண்ணெயானது அதிக அளவிலான ஊட்டச்சத்தை கொண்டுள்ளது.இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள், விட்டமின் ஈ மற்றும் சி, கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள ஃபிரிரேடிகல்களை எதிர்த்து போராடுகிறது. ஃபிரிரேடிகல் என்பது ரத்தம் மற்றும் திசுக்களில் பரவக் கூடிய நிலையற்ற மூலக்கூறு ஆகும்.
மேலும், முருங்கை எண்ணெயை முகத்தில் தடவும் போது சருமத்தில் சேதமடைந்த திசுக்களை மீட்டுத்தர உதவுகிறது. 40 வயதிற்கு மேல் சருமத்தில் ஏற்படும் மங்கு மற்றும் சுருக்கம் போன்றவற்றை நீக்குவதில் முருங்கை எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.முருங்கை எண்ணெயில் ஓலிக் அமிலம் உள்ளதால் இது ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதில் முக்கியபங்கு வகிக்கிறது. இந்த முருங்கை எண்ணெய் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க….
உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருக்கிறது:

கூந்தல் வறட்சிக்கு முக்கிய காரணம் உச்சந்தலையில் ஏற்படும் வறட்சிதான். இதனால் கூந்தலில் ஈரப்பதம் குறைந்து தலைமுடி உதிர செய்கிறது. முருங்கை எண்ணெய் வாரம் 2 முறை தலை முடியில் தடவி குளித்து வருவதன் மூலம் உச்சந்தலையில் ஏற்படும் வறட்சியை குறைத்து தலை முடியை ஈரப்பதமாக வைத்திருப்பதுடன் மட்டுமல்லாமல் முடி உதிர்வு ஏற்படாமல் தடுக்கிறது.
பொடுகு பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது:
தலைமுடியின் பராமரிப்பு குறையும் போது தலை முடியில் பொடுகு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். பொடுகு அதிகமாக இருந்தால் ஆடைகளில் உதிர்வது போன்ற பிரச்சனைகளை எற்படுத்த கூடும். இதனை கட்டுப்படுத்த முருங்கை எண்ணெயை கூந்தலில் தடவி குளித்து வருவதன் மூலம் பொடுகு பிரச்சனையை சரி செய்ய முடியும்.
பளபளப்பான சருமம்:

முருங்கை எண்ணெய்யில் வைட்டமின் ஏ,சி,ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தை புத்துயிர் பெற செய்து முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
சுருக்கங்களை தடுக்கிறது:
முருங்கை எண்ணெயில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. முருங்கை எண்ணெயை முகத்தில் தடவி குளித்து வருவதன் மூலம் வயது முதுமை மற்றும் காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் ஏற்படும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் :

முருங்கை எண்ணெய் சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது.இது முகத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.முருங்கை எண்ணெய் முகத்தில் உருவாகும் நுண்ணுயிர்களை அழித்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பாதாம் எண்ணெய் மருத்துவ பயன்கள்
முருங்கை எண்ணெயை யார் பயன்படுத்த கூடாது?
முருங்கை எண்ணெய் பயன்படுத்துவது சிலருக்கு பிரச்சனையை ஏற்படுத்த கூடும்.செரிமான பிரச்சனை இருப்பவர்கள், நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் கர்ப்பிணி பெண்கள் போன்றவர்கள் முருங்கை எண்ணெயை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
| இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள்! |














