Natural Face Packs For Dry Skin in Tamil
வணக்கம் நண்பர்களே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும். அதாவது ட்ரை ஸ்கின், ஆயில் ஸ்கின் மற்றும் நார்மல் ஸ்கின் என்று இருக்கும். அப்படி ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு முகம் பொலிவிழந்து எப்போதும் வறண்டு காணப்படும். எனவே இதனை தடுக்க சில வகையான காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல், முகத்திற்கு இயற்கையான சில பொருட்களை அப்ளை செய்வதன் மூலமும் ட்ரை ஸ்கின்னை போக்கலாம். அந்த வகையில் உலர் சருமம் உள்ளவர்களுக்கு பயனுள்ள வகையில் சில இயற்கை அழகுக்குறிப்புகளை கொடுத்துள்ளோம். எனவே உலர் சருமம் உள்ளவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.
Homemade Face Pack For Dry Skin in Tamil:
டிப்ஸ் -1
முதலில் பாதி அளவுடைய அவகோடா பழத்தை எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
இப்போது இதனை முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை உலர வைக்கவும். பிறகு, வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்து சருமத்தை மென்மையாக்குகிறது.
டிப்ஸ் -2
அதிகமான தண்ணீர் குடிப்பதன் மூலம் வறண்ட சருமத்தை போக்கலாம். மேலும் வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவதன் மூலம் உலர் சருமத்தை குணமாக்கலாம்.
உங்கள் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இதை மட்டும் செய்யும் போதும்..!
டிப்ஸ் -3
3 ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். இதனை 15 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
டிப்ஸ் -4
வெள்ளரிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். இதனை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஆலோவேரா ஜெல் அல்லது யோகர்ட் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
டிப்ஸ் -5
வாழைப்பழத்தின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு, இதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதனை 20 நிமிடங்கள் முகத்தில் அப்படியே வைத்து விட்டு பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
மேற்கூறியுள்ள குறிப்புகளில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை பயன்படுத்தி வருவதன் மூலம் விரைவில் உங்கள் முகம் சாஃப்டாக மாறுவதை நீங்களே உணரலாம்.
உங்கள் சரும வகையை கண்டுபிடிப்பது எப்படி ?
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |