முகம் பளபளக்க செய்யும் முட்டையின் வெள்ளைக்கரு (Skin Whitening Tips)..!
Egg White For Face In Tamil – இப்போது இருக்கும் காலகட்டத்தில் பலரும் பலவகையான சரும பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் அந்த வகையில், முகத்தில் இருக்கும் கருமைகள், கரும்திட்டுகள், கருவளையங்கள், முக சுருக்கங்கள் போன்றவற்றை போக்க முட்டையை வைத்து ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க….
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil |
Egg White For Face – தேவையான பொருட்கள்:
- ஒரு முட்டையின் வெள்ளைக்கரு,
- எலுமிச்சை சாறு அரைமூடி,
- சர்க்கரை – ஒரு ஸ்பூன்,
- கடலை மாவு – ஒரு ஸ்பூன்,
egg white for face in tamil- ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை:
இந்த ஃபேஸ் பேக் தயார் செய்வதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரைமூடி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது.
முகம் வெள்ளையாக (Skin Whitening Tips) – பயன்படுத்தும் முறை:
முகத்தை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள், பின்பு தயார் செய்து வைத்துள்ள இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்யுங்கள். முகத்தில் அப்ளை செய்த பின்பு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள் பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும்.
அடுத்ததாக முட்டையை வைத்து(egg white for face in tamil) cleansing, scrubbing & face pack ஆகிய மூன்று முறைகளை பற்றி இப்போது இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!
தலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய்..! Mudi valara |
Egg White For Face step: 1 cleansing:-
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் காய்ச்சாத பசும் பால் இரண்டு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள், பின் காட்டன் பஞ்ஜினை சிறிதளவு எடுத்து இந்த பாலில் நனைத்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின் 2 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
Egg White For Face step: 2 scrubbing:-
Scrubbing செய்வதற்கு முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவினை உடைத்து எடுத்துக்கொள்ளுங்கள், பின்பு அவற்றில் ஒரு ஸ்பூன் சுகர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் அகன்றுவிடும். மசாஜ் செய்த பின்பு சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
Egg White For Face step: 3 Face Pack:-
ஒரு பவுலில் சிறிதளவு முட்டையின் வெள்ளை கரு(egg white in tamil) மற்றும் ஒரு ஸ்பூன் சோள மாவு (corn flour) ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும், முகம் பொலிவுடன் காணப்படும். இந்த cleansing, scrubbing & face pack மூன்று முறையினையும் வாரத்தில் ஒரு முறை செய்து வர நல்ல மாற்றத்தை உணரமுடியும்.
சருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம் !!! |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |