சருமம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க அழகு குறிப்பு..! Face brightness tips in tamil..!
Face brightness tips in tamil:- முக கருமை நீங்க மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க, சருமத்தின் அழகை அதிகரிக்க இங்கு சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தினமும் பின்பற்றி வர, நீங்கள் எப்போதும் பளிச்சென்று அழகாக ஜொலிக்கலாம்.
சரி வாங்க முக கருமை நீங்க (Face brightness tips in tamil) மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க அழகு குறிப்பு என்ன உள்ளது, என்பதை பற்றி இங்கு நாம் படித்தறிவோம்.
![]() |
முக கருமை நீங்க / face brightness tips in tamil – அழகு குறிப்பு: 1
Face brightness tips in tamil:- ஆட்டுப்பால், பேக்கிங் சோடா மற்றும் கடலை மாவு போன்றவை அழகான சருமத்தைப் பெற உதவும் சிறப்பான பொருட்கள் ஆகும். ஆட்டுப் பால் சருமத்திற்கு மென்மை அளிக்கும், கடலை மாவு மற்றும் பேக்கிங் சோடா இறந்த செல்களை நீக்கி, சரும நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும்.
சரி இந்த மூன்று பொருட்களையும் பயன்படுத்தி சரும அழகை எப்படி அதிகரிக்கலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- ஆட்டுப்பால் – 2 மேசைக்கரண்டி
- கடலை மாவு – 1 தேக்கரண்டி
- பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
face beauty tips tamil – பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு சுத்தமான பௌலில் ஆட்டுப்பால் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
![]() |
முக கருமை நீங்க / face brightness tips in tamil – அழகு குறிப்பு: 2
எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருட்கள். இவை சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு, சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். இந்த பொருட்களைக் கொண்டு ஸ்கரப் தயாரித்து, சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமைகள் மாயமாய் மறைந்துவிடும்.
face beauty tips tamil – தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
face beauty tips tamil – பயன்படுத்தும் முறை
Face brightness tips in tamil:- ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
![]() |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |