முகத்தில் வளரும் முடியை நீக்க பாட்டி வைத்தியம்

Advertisement

முகத்தில் வளரும் முடியை நீக்க பாட்டி வைத்தியம்

பெண்களுக்கு உதட்டின் மேலயும், முகத்தின் தாடை பகுதியிலும் கண்ணனுக்கு தெரியாத முடி வளரும். இதனால் வெளியே வருவதற்கே சற்று கூச்சம் அடைவார்கள். மேலும் இதனை தடுப்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். சில பேர் பார்லர் சென்று இதனை நீக்குவார்கள். இதனால் முகத்தில் உள்ள முடி நீங்கும். ஆனால் அந்த இடத்தில் கருப்பாக மாறி விடும். அதனால் நீங்கள் இயற்கையான முறையை கையாளுவது நல்லது. இந்த பதிவில் முகத்தில் உள்ள முடியை நீக்க பாட்டி வைத்தியத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

முகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள்

எலுமிச்சை சாறு:

முகத்தில் வளரும் முடியை நீக்க பாட்டி வைத்தியம்

ஒரு பவுல் எடுத்து அதில் எலுமிச்சை சாறு 1/2 தேக்கரண்டி எடுத்து கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். நன்றாக இரண்டும் மிக்ஸ் ஆவது போல கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தேவையில்லாத முடி வளர்ந்திருக்கும் இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். அந்த இடத்திலையே 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு 15 நிமிடத்திற்கு பிறகு அந்த இடத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் என்று தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள முடிகள் நீங்கி விடும்.

மஞ்சள் தூள்:

முகத்தில் வளரும் முடியை நீக்க பாட்டி வைத்தியம்

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு,  பால் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களும் நன்றாக மிக்ஸ் ஆவும் வரை கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த பேக்கை முகத்தில் உள்ள முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இதனை 20 நிமிடத்திற்கு வைத்து கொண்டு அதன் பிறகு அந்த இடத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இயற்கையாகவே மஞ்சளில் ஆன்டி பயாடிக் தன்மை உடையதால் இதனை முகத்தில் பயன்படுத்துவதால் எந்த பிரச்சனையும் இருக்காது. மேலும் இவை முடியை நீக்கும் தன்மை உடையது. நம் முன்னோர்கள் எல்லாம் மஞ்சளை தேய்த்து குளித்திருப்பார்கள். அதனால் அவர்கள் முகத்தில் பருக்களோ அல்லது முடியோ எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!

 

Advertisement