Face Open Pores Solution at Home in Tamil
பொதுவாக அனைவருக்கும் முகத்தில் ஏற்படும் பிரச்சனை என்றால் அது பருக்கள் தான். பருக்களினால் முகத்திற்கு பல பிரச்சனைகள் ஏற்படும். அதாவது ஒரு சிலருக்கு பருக்களினால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு முகத்தில் பள்ளங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் பள்ளங்களை மறைய வைப்பதற்காக நீங்களும் பல வகையான வேதிபொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள்.
ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் முகத்தில் உள்ள பள்ளங்களை மறைய வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் முகத்தில் உள்ள பள்ளங்களை மறைய வைத்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Open Pores Treatment at Home in Tamil:
முகத்தில் உள்ள பள்ளங்களை மறைய வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க. முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- பால் – 2 டேபிள் ஸ்பூன்
- முட்டை – 1
- கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
- வைட்டமின் E கேப்சூல் – 2
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 முட்டையில் இருந்து வெள்ளை கருவை மட்டும் பிரித்தெடுத்து ஊற்றி கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கழுத்தில் உள்ள கருமையை போக்க தக்காளியுடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்கள் போதும்
தேங்காய் எண்ணெயை கலக்கவும்:
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் தூளை சேர்க்கவும்:
அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பாலை கலந்து கொள்ளவும்:
பின்னர் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பாலை கலந்து கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளவும்:
அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் முகம் மட்டுமில்லாமல் உங்கள் உடல் முழுவதும் பொலிவு பெற பாலுடன் இந்த ஒரு பொருளை கலந்து தடவுங்க போதும்
வைட்டமின் E கேப்சூலை கலக்கவும்:
இறுதியாக அதனுடனே நாம் எடுத்து வைத்திருந்த 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் கலந்து கொள்ளவும். பின்னர் இதனை உங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் உள்ள உரைப்பானில் வைத்து நன்கு உறைய வைத்து பிறகு அதனை எடுத்து உங்களின் முகத்தில் நன்கு மசாஜ் செய்யுங்கள்.
இதனை தினமும் அல்லது வாரத்திற்கு இரு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைவதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் சருமம் நன்கு பொலிவு பெற இந்த டிப்ஸ் மட்டும் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |