Face Open Pores Treatment Home Remedy
முகத்தில் பருக்கள் வந்தாலே நாளடைவில் கரும்புள்ளியாக மாறிவிடும். இன்னும் சில நாட்களில் அவை பள்ளங்களாக மாறிவிடும். இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தியும் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்காது. அதனால் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள பள்ளங்களை மறைய வைக்கலாம் அது எப்படி என்றுதெரிந்து கொள்வோம் வாங்க..
முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முட்டையின் வெள்ளை கரு:
ஒரு பவுலில் ஒரு முட்டையின் வெள்ளை கரு, அதனுடன் ஓட்ஸ் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்த்து 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி கொள்ளவும்.
மஞ்சள்:
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடத்திற்கு முகத்தில் மசாஜ் செய்யவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
அக்குள் கருமையை நீக்க உருளைக்கிழங்கு, தேங்காய் எண்ணெய் முதல் இன்னும் சில டிப்ஸ்
தக்காளி:
ஒரு பவுலில் தக்காளி சாறு சிறிதளவு, தேன் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
கற்றாழை:
ஒரு கற்றாழையை எடுத்து அதன் தோல்களை சீவி, உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மற்றும் எடுத்து முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.சர்க்கரை:
ஒரு கிண்ணத்தில் சர்க்கரை 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இரண்டு நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்க உருளைக்கிழங்கு மட்டும் போதும்..
முல்தானி மெட்டி:
ஒரு பவுலில் முல்தானி மெட்டி 2 தேக்கரண்டி, 2 தேக்கரண்டி பால் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை மட்டும் தொடர்ந்து அப்பளை செய்து வந்தாலே விரைவில் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைவதை காண்பீர்கள்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |