Homemade Face Pack For Glowing Skin in Tamil
அனைவரும் முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக Face பேக் அப்ளை செய்வது ஒரு பழக்கமாக வைத்து இருப்பார்கள். இதில் அதிகமானவர்கள் பார்லருக்கு சென்று அங்கு பிடித்த மாதிரியான Face பேக்கை போட்டு கொள்வார்கள். ஆனால் அது அனைத்தும் உங்களுடைய முகத்தை நிரந்தரமாக பளபளப்பாக இருக்க வைக்குமா என்பது கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கும். அதனால் இனி நீங்கள் பார்லருக்கு செல்லாமல் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் 2 பொருட்களை மட்டும் வைத்து வீட்டிலேயே Face பேக் தயார் செய்து அதனை எப்படி முகத்திற்கு அப்ளை செய்வது என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் உள்ள இரண்டு பொருட்களை வைத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்..!
முகம் பளபளப்பாக இருக்க:
தேவையான பொருட்கள்:
- தக்காளி- 1
- உருளைகிழங்கு- 1
- முல்தானி மெட்டி- 2 ஸ்பூன்
- கடலை மாவு- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Face Pack For Glowing Skin at Home in Tamil:
ஸ்டேப்- 1
தக்காளி முகத்திற்கு பயன்படுத்தும் போதும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி விடும். அதனால் 1 தக்காளியை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசிக்கொண்டு அதனை மிகவும் நைசாக நறுக்கி கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பின்பு 1 உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு அதனை நைசாக துருவி தக்காளி வைத்துள்ள கிண்ணத்தில் போட்டு நன்றாக உங்களுடைய கைகளால் பிசைந்து அதிலிருந்து சாறு பிழிந்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது கிண்ணத்தில் இருக்கும் அந்த சாறுடன் 2 ஸ்பூன் முல்தானி மெட்டி, 1ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக சிறிது நேரம் கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
சிறிது நேரம் கழித்த பிறகு கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் 1/2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய முகத்தை பளபளப்பாக வைப்பதற்கு Face Pack தயாராகிவிட்டது.
ஸ்டேப்- 5
கடைசியாக நீங்கள் தயாரித்த அந்த Face Pack-கை உங்களுடைய முகத்தில் நன்றாக அப்ளை செய்து அதன் பிறகு 5 நிமிடம் முகத்தில் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
ஸ்டேப்- 6
20 நிமிடம் கழித்த பிறகு முகத்தை சாதாரணமான தண்ணீரில் அலசி விடுங்கள். இப்போது உங்களுடைய முகத்தை பார்த்தால் உங்களுக்கே நல்ல மாற்றம் தெரியும்.
இந்த Face Pack உங்களுடைய முகத்தில் இருக்கும் பரு, கரும்புள்ளி, கருவளையம் மற்றும் தோல் சுருக்கம் ஆகியவற்றை நீக்கி முகத்தை உடனடியாக பளபளக்க வைக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இந்த ஹேர் டையை பயன்படுத்துங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |