முகம் பளபளப்பாக இருக்க
வணக்கம் நண்பர்களே.! இன்றைய உலகில் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை கலரா என்று தான். மனிதனாக பிறந்த அனைவரும் ஒரே மாதிரியான நிறத்தையும், குணத்தையும் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரும் ஒவ்வொரு மாதிரியான நிறம், தோற்றம், குணத்தை கொண்டிருப்பார்கள். கலரா இல்லையென்று கடைகளில் விற்கும் கிரீம்களை பயன்படுத்தும் போது சருமத்தில் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. சருமத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாமல் இயற்கையான முறையில் முகத்தை எப்படி பளபளப்பாக்குவது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
முகம் வெள்ளையாக இயற்கை வழிகள்:
உருளைக்கிழங்கு:
முதலில் ஒரு உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளுங்கள். இதை இரண்டாக நறுக்கி கொள்ளுங்கள். பாதி உருளைக்கிழங்கிலுருந்து சிப்ஸ்க்கு நறுக்குவது போல் 3 துண்டுகள் நறுக்கி கொள்ளுங்கள். ஒவ்வொரு துண்டுகளாக எடுத்து முகத்தில் வைத்து மசாஜ் செய்யுங்கள். இப்படி உருளைக்கிழங்கை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையம் நீங்கும். மேலும் முகத்தை பொலிவடைய செய்யும்.
இதையும் படியுங்கள் ⇒ வெளியில் செல்லும் போது முகம் பிரகாசமாக இருக்க இந்த ஒரு பேக் போதும்
உருளைக்கிழங்கை கேரட் சீவுவது போல் சீவி கொள்ளுங்கள். பிறகு சீவிய உருளைக்கிழங்கிலுருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு சாற்றில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள்ளுங்கள். இதனுடன் காய்ச்சாத பால் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இந்த பேக்கை வாரத்தில் 3 தடவை அப்ளை செய்யுங்கள். முகம் கலராக மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.
தக்காளி:
ஒரு தக்காளியை எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி விட்டு மிக்சியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டுடன் காய்ச்சாத பசும் பால் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். பால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பொலிவடைய செய்யும். இந்த பேக்கை வாரத்தில் 2 முறை பயன்படுத்துங்கள்.
கற்றாழை:
கற்றாழையில் இயற்கையாகவே நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. கற்றாழையை சீவி உள் பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அந்த ஜெல்லில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளுங்கள். இந்த பேக்கை வாரத்தில் 3 தடவை அப்ளை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி அழகாக தோற்றமளிக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக இருக்க டிப்ஸ்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |