ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் ..!

Men Beauty Tips

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் (Men Beauty Tips) ..!

பெண்களின் அழகுக்கு நிகராக தற்போது ஆண்களும் (Men Beauty Tips)  தங்களது அழகை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நம் பொதுநலம் பகுதியில் ஆண்களின் முகத்தை வசீகரமாக்க சில சூப்பர் அழகு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றினாலே போதும் இயற்கையாகவே ஆண்கள் முகம் வசீகரமாக (Men Beauty Tips) இருக்கும்.

சரி வாங்க எப்படி என்னென்ன ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் (Men Beauty Tips) இருக்கிறது என்று இப்போது நாம் காண்போம்.

ஆண்கள் முகம் வசீகரமாகும்(Men Beauty Tips) அழகு குறிப்புகள்:

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்:1

சில ஆண்களுக்கு சருமத்தில் அதிகளவு பருக்கள் தோன்றும், அது சில நாட்களில் மறைந்து விடும், இருந்தாலும் அவர்களது சருமத்தில் பருக்களினால் தோன்றிய தழும்புகள் மட்டும் அப்படியே இருக்கும்.

இந்த தழும்புகள் மறைய இதோ சூப்பர் டிப்ஸ் (Men Beauty Tips)…! இந்த டிப்ஸை செய்து பாருங்கள் பருக்களினால் தோன்றிய தழும்புகள் சில நாட்களில் மறைந்து விடும்.

அதாவது எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் இரண்டையும், ஒன்றாக கலந்து சருமத்தில் தடவுங்கள்.

பின்பு 15 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வரவும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் தோன்றும் வடுக்கள் மறையும், பருக்கள் வராமல் தடுக்கும், மேலும் சருமத்தில் தோன்றும் துவாரங்களை குறைக்கும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்:2

பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் நன்கு மைபோல் அரைத்து சருமத்தில் தடவிவர ஆண்களின் வறண்ட சருமம் பளபளப்பாக மாறும்.

மீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்:3

தினமும் அதிகாலை அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்களின் அழகு கூடும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்:4

தினமும் ஒரு கிளாஸ் பாலில் தேவையான அளவு தேன் கலந்து அருந்திவந்தால், அனைத்து நோய்களையும் எதிர்த்து சருமம் அழகாகும் மற்றும் உடல் பளபளப்பாகும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் :5

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, நன்றாக குழைத்து உடம்பில் தடவி, பயத்தமாவு தேய்த்து குளித்தால், தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும் மேலும் சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்பு டிப்ஸ் :6

ஆப்பிள் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர கண்கள் நல்ல அழகு பெரும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்பு டிப்ஸ் :7

தினமும் இரவு தூங்குவதற்கு முன் சருமத்தில் ஆலிவ் ஆயிலை தடவி வந்தால் சருமம் சாஃப்டாக இருக்கும்.

ஆண்களுக்கான அழகு குறிப்பு (Men Beauty Tips)..!

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்பு டிப்ஸ் :8

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி, சருமத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு முகத்தை சோப்பு போட்டு கழுவுங்கள்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்பு டிப்ஸ் :9

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிதளவு பன்னீர் மற்றும் சந்தனம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி வர கருமை நிறம் மறையும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்பு டிப்ஸ் :10

இரண்டு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள், இரு ஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை ஓன்றாக கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ,. சருமத்தில் தோன்றும் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

சொட்டை தலையில் முடி வளர வேண்டுமா ?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.