Fast Hair Growth Oil Home Remedies
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, தலையில் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகள் வருவது இயற்கை தான். ஆனால் நாம் இந்த பிரச்சனைகளை இயற்கையான முறையில் சரி செய்வதை விட்டுவிட்டு கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் மேலும் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதுபோல பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆசை முடி நீளமாக வளர வேண்டும் என்பது தான். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்று ஒரு அருமையான எண்ணெயை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
வெங்காயம் எடுத்து கொள்ளவும்:
வெங்காயத்தின் பயன்கள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். வெங்காயத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. வெங்காயத்தில் இருக்கும் சத்துக்கள் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் பொடுகு தொல்லையை அடியோடு விரட்டுகிறது. அதனால் நாம் வெங்காயத்தை முடியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.
அடுத்து நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் கருவேப்பிலை. கறிவேப்பிலையில் இருக்கும் சத்துக்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. மேலும் முடியை கருமையாக வளர செய்கிறது.
பத்தே நாட்களில் உங்க முடி கிடுகிடுன்னு வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்
மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:
அதனால் நாம் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் 6 சின்ன வெங்காயம் எடுத்து கொள்வோம். அதேபோல 200 ml தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளவும். மேலும் இந்த 3 பொருட்களும் உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளலாம்.
அடுத்து ஒரு மிக்சி ஜாரில் வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை போட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
👉 2 முறை அப்ளை செய்தால் போதும் முடி கட்டுக்கடங்காமல் காடுபோல் வளர்ந்துவிடும்
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளவும். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்டை ஊற்றி கொள்ள வேண்டும்.
எண்ணெயை நன்றாக கொதிக்க விட வேண்டும். எண்ணெய் கொதித்து எண்ணெயின் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
பின் இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை எப்பொழுதும் பயன்படுத்துவது போல முடியின் வேர் பகுதியில் இருந்து முடியின் நுனி பகுதி வரை நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல தடவி வந்தால் உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதை நீங்களே காண்பீர்கள்.
👉 வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |