Fast Hair Growth Oil in Tamil
முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டும் என்று தான் ஆசை அதிகம் உள்ளது. இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தும் போது முடி வளர்ந்தாலும் நாளடைவில் ஆரோக்கியதிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் சில எண்ணெய்களை மற்றும் தலையில் தடவி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். அது எப்படி என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
செம்பருத்தி பூ மற்றும் தேங்காய் எண்ணெய்:
வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டமளிக்கும் சத்துக்கள் செம்பருத்திப் பூக்களில் நிறைந்துருப்பதால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும் மற்றும் முடி நரைப்பதையும் தடுக்கிறது. தேங்காய் எண்ணெயுடன் இணைந்தால் அடர்த்தியான, கருமையான முடி வளர்ச்சி கிடைக்கும் .செம்பருத்தி பூக்களை தண்ணீரில் கழுவி ஈரம் இல்லாமல் காய வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் செம்பருத்தி பூக்களை சேர்த்து சூடானதும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு வடிகட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த எண்ணெயை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து தலையை ஷாம்பு பயன்படுத்தி தேய்த்து குளிக்கவும்.
தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்
நெல்லிக்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய்:
ஆம்லாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் பளபளப்பானமுடி மற்றும் நரை முடி ஏற்படாமல் முடியை கருப்பாகவே வைத்து கொள்ள உதவுகிறது.
அடுப்பில் கடாய் வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சில நெல்லிக்காய் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு கடாயிலே 5 நாட்களுக்கு அப்படியே இருக்கட்டும். பிறகு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை அப்பளை செய்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்:
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அதில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். இலையின் சாயம் தேங்காய் எண்ணெயில் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு வடிகட்டியை வைத்து வடிகட்ட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும். இந்த எண்ணெயை வாரத்திற்கு 3 முறை தளி முழுவதும் தடவி 1 மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்கலாம்.
கருவேப்பிலையில் இந்த எண்ணெயை கலந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |