வெந்தயம் முடி வளர
முடியின் வளர்ச்சிக்காக பலரும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் கெமிக்கல் நிறைந்ததாக இருந்தால் முடிக்கும், ஆரோக்கியத்திற்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையை கையாள்வது சிறந்தது. உங்களுக்கும் உதவவும் வகையில் நம் பதிவில் இயற்கை முறையில் முடி அடர்த்தியாக வளர, வெள்ளை முடி கருப்பாக வளர, முகம் பளபளப்பாக அழகு சார்ந்த பிரச்சனைக்கு தீர்வாக இயற்கை முறையில் பதிவிட்டுள்ளோம். அதனை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக உள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். வாங்க வெந்தயத்தை வைத்து 15 நாட்களில் முடியை எப்படி வளர செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
Fenugreek For Hair Growth:
முதலில் 2 தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து மிக்சியில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பொடியாக அரைத்து கொள்ளவும். அரைத்த வெந்தய பொடியை சலித்து எடுத்து கொள்ளவும்.
15 நாட்களில் கொட்டிய இடத்தில் முடி வளர இந்த ஹேர் பேக் மட்டும் போதும்..
பிறகு ஒரு பவுலில் 30 ML தேங்காய் எண்ணெய் ஊற்றவும். 20 ML ஆமணக்கு எண்ணெய் ஊற்றவும். பின் அதனுடனே 3 அல்லது 4 தேக்கரண்டி வெந்தய பொடி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொள்ளவும், அதன் உள்பகுதியில் மிக்ஸ் செய்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் எண்ணெய் கிண்ணத்தை வைக்கவும். உள்பகுதியில் வைத்திருக்கும் பாத்திரத்தில் உள்ள எண்ணெய் சூடு வந்த பிறகு கரண்டியை பயன்படுத்தி கிண்டி கொண்டே இருக்கவும். நெய் பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பிறகு எண்ணெயை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இது போல் வாரத்தில் 2 முறை என்று தொடர்ந்து 15 நாட்கள் அப்பளை செய்து வந்தால் உங்கள் தலை முடி வளர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.
வெறும் 10 நிமிடத்தில் கொத்து கொத்தாக இருக்கும் நரை முடி அனைத்தையும் கருமையாக மாற்றும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |