நரைமுடி வராமல் தடுக்கும் உணவுகள் | Food to prevent white hair naturally In Tamil
பெண்களுக்கு முடி கொட்டினால் கவலை கொள்வார்கள். முடி கொட்டுவதை விட முடி நரைத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகுவார்கள். இளம் வயதிலே பெரும்பாலான பெண்களுக்கு முடி நரைத்து விடுகிறது. பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் முடி கரைகிறது. முடி நரைப்பதை தடுக்க எந்த உணவுகளை உட்கொள்ளலாம் என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம்.
முடிநரைப்பது வைட்டமின் குறைபாடு தான் நாம் எடுத்துக்கொள்ளும் உணவை நார்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் நமக்கு உடல் ஆரோக்கியமும் முடி நரைப்பதும் கொட்டுவதும் குறையும். இன்றைய காலத்து பெண்கள் பெரிதாக சாப்பிடுவதே இல்லை. Burger, Pizza, Noodles போன்ற Fast Food தான் பெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் ஆபாத்தானது. எனவே இந்த பதிவில் எந்த உணவை சாப்பிட்டால் முடி கருமையாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முடிஇளமையிலே நரைப்பதன் காரணம்:
பெண்களின் மன அழுத்தம், வைட்டமின் பி 12 குறைபாடு, சூர்ய கதிர்வீச்சால் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சனைகள் இருப்பதால் தான் அவர்களுக்கு இளமையிலேயே முடி நரைக்கிறது.
இளநரையை தடுக்கும் உணவுகள்:
பால், தயிர், சீஸ் போன்ற உணவுகளில் வைட்டமின் பி 12, ப்ரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக தயிரில் உள்ள ப்ரோபையோட்டிக் (Probiotic) என்கிற நன்மை தரும் பாக்டீரியா உணவில் உள்ள சத்து பொருட்களை உட்கிரகிக்க உதவுவதால் நரைமுடியை தடுக்கிறது.
சோயாபீன்ஸ் இல் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் ப்ரொபேர்ட்டிஸ் மற்றும் ப்ரோட்டீன் சத்து நரைமுடியை கருமையாக்குகிறது.
அனைத்து வகையான கீரை வகைகள் காளிபிலோவேர், ப்ரோக்கோலி, முட்டைகோஸ் போன்ற உணவுகளில் உள்ள அயன், வைட்டமின் மற்றும் கால்சியம் ஆனது முடியின் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்தை கொண்டுள்ளது.
காளானில் அதிகமாக தாமிரம் உள்ளது. இந்த தாமிரம் முடிக்கு கருமை நிறத்தை தரும் மெலனின் உற்பத்திக்கு உதவி தலை முடியை கருமையாக்குகிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட் போன்ற காய்கறியும் முடி நரைப்பதை தடுக்கிறது.
முட்டையில் உள்ள வைட்டமின் பி 12, ப்ரோடீன் சத்துக்கள் முடியை கருமையாக்குகிறது.
பழங்களில் அனைத்து வகையான பெரி பழங்களில் உள்ள வைட்டமின் சி ஆரயோக்கியமான தலைமுடியை பெற உதவுகிறது.
மீன் வகைகளில் காலா மீன், கானாங் கெளுத்தி மீன், மத்தி மீன் போன்ற மீன்கள் முடியின் வறட்சி தன்மையை நீக்கி முடி நரைப்பதை தடுக்கிறது.
பாதம் மற்றும் வால்நட் (Walnut) போன்ற விதைகளில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஜிங்க் சத்துக்கள் முடிக்கு வலிமையை தருவதுடன் மேலும் நரை முடி வருவதை தடுக்கிறது.
தினை மற்றும் ஓட்ஸ் தானியங்களில் உள்ள வைட்டமின் பி, அயன், ஜிங்க் ஆனது தலைமுடிக்கு ஊட்டச்சத்தை கூடுகிறது.
டார்க் சாக்லேட் (Dark Chocolate) இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் காப்பர் நரை முடியை கருமையாக்குகிறது.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |