முகம் பளபளப்பாக இருக்க கிளிசரின் அழகு குறிப்புகள் | Glycerin For Skin Whitening in Tamil

Glycerin Uses in Tamil

கிளிசரின் அழகு குறிப்புகள் | Glycerin Uses in Tamil

ஒரு சிலருக்கு முகம் வறண்டு காணப்படும், அதற்கு பெரும்பான்மையான காரணமாக இருப்பது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது தான். வறண்ட சருமத்தை சரி செய்வதற்கு பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களில் ஒன்று கிளிசரின். சருமத்தில் Ph லெவலை சமமாக வைத்து கொள்வதற்கும், வறண்ட சருமத்தை சரி செய்யவும் பயன்படுகிறது. கிளிசரின் விலங்கு கொழுப்பு மற்றும் காய்கறி கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பதிவில் கிளிசரினை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்று படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள் – Glycerin Uses For Face in Tamil:

Glycerin Uses in Tamil

 1. பால் – 1 டேபிள் ஸ்பூன் (காய்ச்சாதது)
 2. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
 3. கிளிசரின் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 1 (Cleanser)

 • ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின், 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 • பின் இந்த கலவையை காட்டன் துணியை பயன்படுத்தி முகத்தில் தடவி கொள்ளவும். இந்த செய்முறை மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை, அழுக்குகள் நீங்கி முகம் Fresh-ஆக இருக்கும்.

தேவையான பொருட்கள் – Glycerin Uses in Tamil:

கிளிசரின் அழகு குறிப்புகள்

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

 1. கிளிசரின் – 1 டேபிள் ஸ்பூன்
 2. ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
 3. தண்ணீர் – சிறிதளவு

செய்முறை: 2 (Toner)

 • 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து முகத்தில் spray போல அடித்து கொள்ளவும். இதை நீங்கள் இரவில் உறங்க செல்வதற்கு முன் பயன்படுத்தலாம். இந்த முறையை பயன்படுத்தினால் முகம் நன்றாக பொலிவு பெறும்.

தேவையான பொருட்கள் – கிளிசரின் அழகு குறிப்புகள்

கிளிசரின் அழகு குறிப்புகள்

 1. வெள்ளை கரு – முழுவதும்
 2. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
 3. ஐஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
 4. கிளிசரின் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 3

 • ஒரு பௌலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து கொள்ளவும் (Egg white), அதில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் (Aloe vera jel), 1 டேபிள் ஸ்பூன் ஐஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
 • பின் அதை முகத்தில் தடவி 30 நிமிடம் காய வைக்கவும். அரைமணி நேரம் கழித்து முகத்தை நீரினால் கழுவி விடவும். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்து வரலாம்.

தேவையான பொருட்கள் – Glycerin Uses in Tamil:

Glycerin For Skin Whitening in Tamil

 1. காஃபீ பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
 2. சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
 3. கிளிசரின் – 1 டேபிள் ஸ்பூன்
 4. தண்ணீர் – சிறிதளவு

செய்முறை: 4 (Scrub)

 • 1 டேபிள் ஸ்பூன் காஃபீ பவுடர், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். பின் இதை முகத்தில் தடவி 2 நிமிடம் ஸ்க்ரப் செய்யுங்கள்.
 • இரண்டு நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்வதற்கு இந்த செய்முறை பயன்படும்.

தேவையான பொருட்கள் – கிளிசரின் அழகு குறிப்புகள்:

Glycerin For Skin Whitening in Tamil

 1. ஆரஞ்சு தோல் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
 2. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
 3. கிளிசரின் – 1 டேபிள் ஸ்பூன்
 4. தண்ணீர் – சிறிதளவு
 5. பால் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 5 (Skin Lightening)

 • ஆரஞ்சு தோல் பவுடர் 1 டேபிள் ஸ்பூன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 • பின் இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும், அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த முறையை நீங்கள் தினமும் செய்யலாம் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையும் செய்யலாம்.

தேவையான பொருட்கள் – கிளிசரின் அழகு குறிப்புகள்:

Glycerin For Skin Whitening in Tamil

 1. முல்தானி மெட்டி – 1 டேபிள் ஸ்பூன்
 2. camphor powder – 1 டேபிள் ஸ்பூன்
 3. கிளிசரின் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 6

 • 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டேபிள் ஸ்பூன் camphor powder, 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் காய வைக்கவும்.
 • அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவவும். இந்த முறையின் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி முகம் தெளிவு பெறும்.
மூக்கில் கருமை மறைய
முகத்தில் கரும்புள்ளி மறைய டிப்ஸ்

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil