முடி நீளமாக வளர | Grow Long Hair Fast At Home in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் அழகை மேம்படுத்துவதில் அந்த அளவிற்கு ஆர்வம் செலுத்த மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அழகுக்கென்றே தனியாக ஒரு நேரத்தை செலவிடுவார்கள். அப்படி பெண்கள் செலவிடும் விஷயங்களில் தலைமுடியும் ஓன்று. பொதுவாக அனைத்து பெண்களுக்குமே முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதனால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. எனவே இனி கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு இந்த பதிவில் கூறும் முறையை ட்ரை செய்து பாருங்க, உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ள வேண்டும். பின் உங்கள் முடிக்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள தண்ணீரை ஊற்றி கொள்ள வேண்டும். தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்த பின் அதில் 1 கப் அளவிற்கு கிராம்பை சேர்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
பின் இதை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் இப்பொழுது இதை முடியில் எப்படி அப்ளை செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
இந்த வெயில் காலத்திலும் உங்க முகம் பொலிவுடன் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும் |
அப்ளை செய்யும் முறை:
நாம் வடிகட்டி எடுத்து வைத்துள்ள கிராம்பு நீரை தலையில் அப்ளை செய்வதற்கு முன் தலையை இரு பாதியாக பிரித்து வைத்து கொள்ள வேண்டும். பின் இந்த நீரை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியின் அடிப்பகுதி வரை நன்றாக அப்ளை செய்து 5 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
முடியில் அப்ளை செய்த பின் 30 நிமிடம் அப்படியே வைத்து கொள்ளவும். பின் உங்கள் தலையை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்கலாம். இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை நின்று, முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். பின் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும் |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |