வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த எண்ணெய் மட்டும் போதும்..!

Updated On: April 12, 2023 5:10 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Grow Long Hair Fast Home Remedies in Tamil

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே தலைமுடியில் பல பிரச்சனைகள் இருக்கும். அதென்ன தலைமுடியில் பல பிரச்சனை என்று யோசிப்பீர்கள். அதாவது தலைமுடியில் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, நரைமுடி மற்றும் செம்பட்டை முடி என்று தலைமுடியில் மட்டுமே பல பிரச்சனைகள் இருக்கும். ஆனால் பெண்களுக்கு முடி நீளமாக வளரவில்லை என்ற பிரச்சனையும் சேர்ந்தே இருக்கும்.

பொதுவாக பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இப்படி செய்வதால் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடும். அதனால் இந்த பதிவில் கூறும் எண்ணெயை மட்டும் பயன்படுத்தி பாருங்க. நீங்களே போதும்னு சொன்னாலும் உங்கள் முடி வளர்ந்துக்கிட்டே போகும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Grow Long Hair Fast Home Remedies in Tamil:

  1. தேங்காய் எண்ணெய் – 100 ml
  2. ஆமணக்கு எண்ணெய் – 20 ml
  3. இஞ்சி – 1 துண்டு
  4. பூண்டு – 6 பற்கள்
  5. மிளகு – 10

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

நாம் எடுத்து வைத்துள்ள இஞ்சியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் மிளகு, பூண்டு சேர்த்து சக்கையாக அரைத்து கொள்ள வேண்டும். ரொம்பவும் மைபோல அரைக்க கூடாது. சக்கையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

உங்கள் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இதை மட்டும் செய்யும் போதும்

கடாய் எடுத்து கொள்ளவும்:

கடாய் எடுத்து கொள்ளவும்

அடுத்து ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் எண்ணெய் 100 ml அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும். பின் ஆமணக்கு எண்ணெய் 20 ml அளவிற்கு சேர்த்து கொள்ளவும்.

அதுபோல உங்களுக்கு எவ்வளவு எண்ணெய் தேவையோ அந்த அளவிற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் மற்ற பொருட்களையும் எடுத்து கொள்ளலாம்.

பின் நாம் அரைத்து எடுத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு சக்கையை எண்ணெயில் போட்டு கலந்து விட வேண்டும். பின் எண்ணெயை நன்றாக கொதிக்க விட வேண்டும். எண்ணெய் கொதித்து அதன் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்

பயன்படுத்தும் முறை:

அவ்வளவு தான். இந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன் உங்கள் முடியின் வேர்ப்பகுதியிலிருந்து முடியின் நுனி பகுதி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும். காலையில் உங்கள் தலையை அலசி கொள்ளலாம். அதுபோல இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தடவி கொள்ளலாம். இதுபோல இந்த எண்ணெயை தொடர்ந்து தடவி வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை