தேங்காயை இப்படிக்கூட பயன்படுத்தலாமா..? இது தெரியாம போச்சே..!

Advertisement

Hair Care Tips At Home in Tamil 

நமது பொதுநலம்.காம் பதிவில் தினமும் ஒரு அழகு குறிப்பு கூறுவதுபோல் இன்றைய பதிவிலும் ஒரு சிறப்பான அழகு குறிப்பு கூறப்பட்டுள்ளது. அது என்ன குறிப்பு என்றால் நமது தலைமுடி பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வதற்கு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் மட்டும் போதும். தேங்காயை வைத்து எவ்வாறு அனைத்து தலைமுடி பிரச்சனைகளையும் போக்குவது என்றுதான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து தேங்காயை வைத்து எவ்வாறு அனைத்து தலைமுடி பிரச்சனைகளையும் சரிசெய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

How to get Healthy Hair Naturally at Home in Tamil:

இதுநாள் வரை சமையலுக்கும் மற்றும் எண்ணெய்க்கும் மட்டும் தான் தேங்காய் பயன்படுகிறது என்று நினைத்து கொண்டிருந்தோம்.  ஆனால் அந்த தேங்காயை வைத்து அனைத்து விதமான நமது தலைமுடி பிரச்சனைகளையும் போக்கிக்கொள்ளலாம். அது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

டிப்ஸ் – 1 

How to get Healthy Hair Naturally at Home in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. தேங்காய் துருவல் – 1 கப் 
  2. கசகசா – 1 டீஸ்பூன் 
  3. வெந்தயம் – 1 டீஸ்பூன் 

இதையும் படித்துப்பாருங்கள்=> தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 1 டீஸ்பூன் கசகசா மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை நன்கு ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்துவைத்துள்ள 1 கப் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதனை எடுத்து உங்களின் தலைமுடி வேர்களில் படும் அளவிற்கு தடவி 1/2 மணிநேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களுக்கு உள்ள அனைத்து தலைமுடி பிரச்சனையும் நீங்கிவிடும்.

டிப்ஸ் – 2

Hair growth tips at home in tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. தேங்காய் துருவல் – 1 கப் 
  2. வெந்தயம் – 1 டீஸ்பூன் 
  3. அரிசி தண்ணீர் – 1 டீஸ்பூன் 
  4. வேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  5. எலுமிச்சை பழச்சாறு – டீஸ்பூன் 

இதையும் படித்துப்பாருங்கள்=> ஒரே வாரத்தில் உங்களின் முடி உதிர்வை நிறுத்தி புதிய முடி வளர இதை ட்ரை பண்ணுங்க

ஒரு மிக்சி ஜாரில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதனை நன்கு வடிகட்டி கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் தலைமுடி வேர்களில் படும் அளவிற்கு தடவி 1/2 மணிநேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களுக்கு உள்ள அனைத்து தலைமுடி பிரச்சனையும் நீங்கிவிடும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement