கூந்தல் பராமரிப்பு – தலைமுடி வெடிப்பு போக இதை செய்தால் போதும்..!

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் பராமரிப்பு – தலைமுடி வெடிப்பு போக இதை செய்தால் போதும்..!

நம் உடலின் ஒவ்வொரு பகுதியையும் தகுந்த முறையில் பராமரிப்பதன் மூலம் அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திட முடியும். ஆம் இது நம்முடைய கூந்தலுக்கும் பொருந்தும். தலை முடி தானாக வளர்ந்து விட்டு போகட்டும் என்று நினைத்து அதற்கான கூந்தல் பராமரிப்பு முயற்சிகளை மேற்கொள்ளாமல் விட்டு விட்டால் தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

சரி கூந்தல் வெடிப்பு பிரச்சனையை இயற்கையான முறையில் அதுவும் நம் வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி எப்படி முடி வெடிப்பு பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என்று இந்த பகுதியில் கூந்தல் பராமரிப்பு டிப்ஸ் பற்றி  நாம் படித்தறிவோம் வாங்க.

இயற்கையான முறையில் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி? (இயற்கை அழகு குறிப்புகள்)..!

கூந்தல் பராமரிப்பு டிப்ஸ் (Hair Care Tips In Tamil)- வாழைப்பழம் மற்றும் தேன் :

தேன் கூந்தலுக்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இது தவிர, தேனுக்கு இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, கூந்தலை சேதத்தில் இருந்து பாதுகாத்து கூந்தலை கண்டிஷன் செய்கிறது.

ஆகவே வாழைப்பழத்துடன் இதன் கலவை கூந்தலை சேதத்தில் இருந்து மீட்டெடுக்க உதவுகிறது.

எனவே நன்றாக பழுத்த வாழைப்பழத்தை ஒன்றை எடுத்து நன்றாக மசித்து அவற்றில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, இந்த கலவையை தங்களின் தலைமுடியில் நன்றாக அப்ளை செய்து அரை மணி நேரங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.

பின்பு தலை அலச வேண்டும் இவ்வாறு செய்வதினால் தலைமுடி வெடிப்பு பிரச்சனை கூடிய விரைவிலேயே சரியாகி விடும்.

கூந்தல் பராமரிப்பு டிப்ஸ் (Hair Care Tips In Tamil) – வாழைப்பழம், முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்:

முட்டை கூந்தலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய மிகவும் பயன்படுகிறது.

தேங்காய் எண்ணெய், கூந்தலின் வேர்கால்களுக்குள் ஊடுருவி, கூந்தல் முடியை புத்துணர்ச்சி பெறச் செய்து, சேதங்களை சரி செய்ய உதவுகிறது.

எனவே ஒரு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும், பின்பு இதனுடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும், பின்பு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் மூன்று ஸ்பூன் தேன் ஆகியவரை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

கூந்தலின் வேர்கால் முதல் நுனி முடி வரை இந்தக் கலவையைத் தடவி, ஒரு ஷவர் கேப் பயன்படுத்தி தலையை மூடிக் கொள்ளவும்.

ஒரு மணி நேரம் அப்படியே விடவும். பின்பு மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் ஒரு முறை இப்படி செய்வதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

கூந்தல் பராமரிப்பு டிப்ஸ் (Hair Care Tips In Tamil) – வாழைப்பழம், யோகர்ட் மற்றும் எலுமிச்சை கூந்தல் மாஸ்க்

தலைமுடி பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்ய இந்த மாஸ்க் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதற்கு ஒரு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து கொள்ளவும், இரண்டு ஸ்பூன் யோகர்ட், எலுமிச்சை சாறு சில துளிகள் மற்றும் பன்னீர் சில துளிகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை தலைமுடியின் வேர் முதல் நுனி முடி வரை நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும்.

பின்பு தலைமுடியை அலசவும். இவ்வாறு செய்வதினால் தலைமுடி வெடிப்பு பிரச்சனைகள் உடனே சரியாகி விடும்.

உங்கள் கூந்தல் பராமரிப்பு முறை..! – Hair Tips in Tamil

 

நண்பர்களே இந்த கூந்தல் பராமரிப்பு டிப்ஸ் (Hair Care Tips In Tamil) தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்களது நண்பர்களுக்கும் பகிரவும் ..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்..!