நரை முடி மறைய ஹேர் டை செய்முறை | Hair Dye Making in Tamil
இப்போது எல்லாம் சிறிய வயதினர் முதல் பெரிய வயதினர் வரை அனைவருக்குமே நரைமுடி பிரச்சனை மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. பெரியவர்களுக்கு இந்த பிரச்சனை வந்தால் வயதாகிவிட்டது என்று சொல்லலாம். ஆனால் சிறு வயதினருக்கு நரை முடி பிரச்சனை வந்தால் என்ன சொல்ல முடியும். அனைவருமே அவர்களை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருப்பார்கள். சிலர் இதனை சகஜமாக எடுத்துக்கொண்டாலும், சிலர் இதனை நினைத்து அதிகளவு கவலைபடுப்பார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்று நாம் ஒரு அருமையான இயற்கை ஹேர் டை தயாரிப்பு முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி பிரச்சனை சரியாகிவிடும். சரி வாங்க இந்த ஹேர் டை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- கரிசலாங்கண்ணி பவுடர் – இரண்டு ஸ்பூன்
- மஞ்சள் – 1/2 ஸ்பூன்
- காபி பவுடர் – 1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை பொடி – ஒரு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
- அவுரி பொடி – 1 1/2 ஸ்பூன்
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஹேர் டை செய்முறை – Hair Dye Making in Tamil:
ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள், அதனை அடுப்பில் வைத்து கரிசலாங்கண்ணி பவுடர் மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக கருக வறுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதனை ஒரு பவுலில் மாற்றி நன்றாக ஆறவைக்கவும்.
பவுடர் நன்கு ஆறியதும் 1/2 ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடி, ஒரு ஸ்பூன் அவுரி பொடி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.
பின் அந்த கலவைக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு மிக்ஸ் செய்த பிறகு 15 நிமிடம் கலவையை நன்கு ஊறவைக்கவும்.
15 நிமிடம் கழித்து இந்த கலவையை நரை முடி உள்ள இடத்தில் நன்கு அப்ளை செய்து 1 மணி நேரம் காத்திருக்கவும் பிறகு தலைக்கு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை அலசவும்.
இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம், இதனை தொடர்ந்து தடவி வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இந்த ஹேர் டையை அனைவரும் பயன்படுத்தலாம், இருப்பினும் சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |