Hair Fall and Dandruff Treatment at Home in Tamil
பொதுவாக இந்த பொடுகு ஒட்டுண்ணி வகையை சார்ந்தது. ஆகவே இது உங்கள் முடியில் விரையில் வந்துவிடும். அதேபோல் பொடுகு வர காரணமும் நாம் தான். அது எப்படி என்றால், தலையை குளித்துவிட்டு காயவைத்த பின்பு தான் தலையை பின்னவேண்டும். இல்லையென்றால் பொடுகு வரும். அதேபோல் வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறை தலைக்கு குளிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் தலையில் பொடுகு வருவதற்கு வாய்ப்பு உண்டு..!
அடிக்கடி கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவது, அதேபோல் தலையில் வறட்சி அதிகமாக இருந்தால், மேலும் மற்றவர்களின் சீப்பை வாங்கி பயன்படுத்துவது என்று நிறைய காரணங்களால் பொடுகு வருகிறது. மேலும் இந்த பொடுகு வந்தால் தலைமுடி கொட்டிக்கொண்டு தான் உள்ளது. இது இரண்டையும் எப்படி சரி செய்வது என்று தெரிந்துகொள்வோம்..!
Hair Fall and Dandruff Treatment at Home in Tamil:
கொய்யா இலை:
கொய்யா இலையில் ஆன்டி பாக்டீரியா இருப்பதால் முடி கொட்டுவதை தடுத்து புதிய முடியை வளர செய்யும். அதேபோல் அதில் வைட்டமின் சி சத்துக்கள் இருப்பதால் அதுவும் முடியை வலிமையாக வைக்க உதவி செய்கிறது. கொய்யா இலையை எடுத்துக் கொள்ளும்போது அந்த இலையில் பின்பக்கம் வெள்ளை பூச்சிகள் இருக்கும். அதனை சுத்தமாக கழுவி இலையை எடுத்துக் கொள்ளவும்.
துளசி:
துளசி நம்முடைய பொடுகை நீக்கும். முடியின் வேரை வலிமையாக வைக்கும். துளசி தலைமுடிக்கு பயன்படுத்தும் போது பேன் அரிப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே நாளில் நரைமுடி கருமையாக இந்த இரண்டு பொருள் போதும்..!
ஹேர் பேக்:
துளசி இலை, கொய்யா இலை இரண்டையும் அரைத்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
அரைத்த பின் அதனை ஒரு துணி அல்லது ஒரு வடிகட்டியை வைத்து வடிகட்டி கொள்ளவும்.
அடுத்து 4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு எடுத்துக் கொள்ளவும். அதில் வடிகட்டி வைத்துள்ள கொய்யா இலை பேஸ்டை அந்த கடலை மாவில் கலந்துகொண்டு, ஒரு திக் பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற நெல்லிக்காய், கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்
பயன்படுத்தும் முறை:
முதலில் உங்கள் முடியை சிக்கு இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். அடுத்து முடியை இருபுறமாக பிரித்து நாம் செய்த பேஸ்ட்டை வேரிலிருந்து ஆரம்பம் செய்து முடி முழுவதும் அப்ளை செய்யவும். அதன் பின் தலையில் பேஸ்டை வைத்து நன்கு மசாஜ் செய்யவும். நகத்தை கொண்டு சொறிய வேண்டாம் மசாஜ் செய்தால் போதும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |