வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உதிர்ந்த முடி அனைத்தும் வளர இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க போதும்..!

Updated On: August 9, 2024 12:14 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

How To Stop Hair Fall Naturally At Home

ஆண்களாக  இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்குமே முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. எவ்வளவு தான் நாம் முடியை பராமரித்து வந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நாம் கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதனால் நாளடைவில் மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் இயற்கையான பொருட்களை கொண்டு முடி உதிர்வை தடுப்பது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Hair Fall Natural Home Remedies in Tamil: 

Hair Fall Natural Home Remedies

  1. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
  2. கற்றாழை – 1
  3. வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  4. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  5. சின்ன வெங்காயம் – 10
  6. வெற்றிலை –
  7. செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
  8. நெல்லிக்காய் – 6
  9. துளசி – 1 கைப்பிடி அளவு
  10. செம்பருத்தி பூ – 10 
  11. தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
  12. மிளகு – 10
  13. கிராம்பு – 6
போதும் போதும் என்று சொல்ற அளவுக்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க..!

வெந்தயத்தை ஊறவைக்கவும்:

வெந்தயத்தை ஊறவைக்கவும்

முதலில் உங்களுக்கு தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து ஊறவைத்து கொள்ளவும். நீங்கள் இந்த எண்ணெய் தயாரிக்க போகிறீர்கள் என்றால் முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைக்க வேண்டும்.

கற்றாழை எடுத்து கொள்ளவும்:

கற்றாழை எடுத்து கொள்ளவும்

அடுத்து முழுதாக இருக்கும் ஒரு கற்றாழையை எடுத்து சுத்தமாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பின் ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும். அதில் கருவேப்பிலை, வெற்றிலை, சின்ன வெங்காயத்தை அறிந்து போட்டு பின் அதனுடன் நாம் ஊறவைத்த வெந்தயத்தை வடிகட்டி அதில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அதே மிக்சி ஜாரில் நெல்லிக்காய், வேப்பிலை, செம்பருத்தி இலை, துளசி, செம்பருத்தி பூ இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இதை செய்தால் புதுமுடி வளர Help பண்ணும்..!

கடாய் எடுத்து கொள்ளவும்:

கடாய் எடுத்து கொள்ளவும்

ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 லிட்டர் அல்லது உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ள வேண்டும்.

எண்ணெய் சூடானதும் அதில் நாம் அரைத்து எடுத்து வைத்துள்ளதை போட்டு கலந்து விட வேண்டும். அடுப்பை குறைத்து வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். பின் அதில் மிளகு மற்றும் கிராம்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

எண்ணெய் 30 லிருந்து 45 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வேண்டும். பின் அடுப்பை அனைத்து எண்ணெயை ஆறவிட வேண்டும்.

பின் எண்ணெயை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.  இந்த எண்ணெயை நீங்கள் எப்பொழுதும் தடவுவது போல தடவி வந்தால் உதிர்ந்த முடி அனைத்தும் மீண்டும் வளரும். நாம் சேர்த்த அனைத்து பொருட்களும் இயற்கையான பொருட்கள் என்பதால் முடி உதிர்வது நின்று முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். இதை மட்டும் ட்ரை செய்து பாருங்கள் அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்.  

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..! 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை