வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பிரசவத்திற்கு பின் முடி உதிர்வதை தடுக்க இயற்கை மருத்துவம்..!

Updated On: March 26, 2022 8:48 AM
Follow Us:
முடி உதிர்வது நிற்க
---Advertisement---
Advertisement

பிரசவத்திற்கு பின் முடி உதிர்வதை தடுக்க இயற்கை மருத்துவம் (Hair Fall Solution At Home In Tamil)..!

முடி கொட்டுவது என்பது மிக பெரிய பிரச்சனை. அதுவும் பிரசவத்துக்கு பிறகு முடி கொட்டுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதை எப்படி சமாளிக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புதுமையான புரோட்டீன் ஹேர் பேக் தயாரிக்க முடியும். அதை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

சரி வாங்க முடி உதிர்வது நிற்க புரோட்டீன் ஹேர் பேக் தயாரிப்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

newஆண்களுக்கான ஹேர் ஸ்டைல்..! Latest Men Hairstyles..!

முடி உதிர்வது நிற்க (Hair Fall Solution At Home In Tamil) 4 வகை புரோட்டீன் ஹேர் பேக் மற்றும் ஹேர் மாஸ்க்..!

முடி உதிர்வது நிற்க – புரோட்டீன் ரிச் ஹேர் பேக் 1

தேவையானவை:

  • வாழைப்பழம் – 1 மீடியம் அளவு
  • தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

முடி வளர / முடி உதிர்வது நிற்க – புரோட்டீன் ஹேர் பேக் செய்முறை:

  • இதையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.
  • இதை ஒரு பவுலில் போட்டு கொள்ளுங்கள்.
  • முடியில் மண்டையின் வேர்கால்களிலும் தடவலாம்.
  • 20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம்.
  • கண்டிஷனர் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு:

  • இந்த பேக்கை பயன்படுத்தும் போது சுடுநீர், இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டாம்.
  • வாரம் ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டு கொள்ளலாம்.
பலன்கள்:
  • முடி பிளவுகள் தடுக்கப்படும்.
  • கேசம் சில்கியாக மாறும்.
  • முடி உதிர்வது நிற்க இது ஒரு சிறந்த பேக்.
  • முடிக்கு தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகும்.

முடி உதிர்வது நிற்க – புரோட்டீன் ஹேர் பேக் 2

தேவையானவை:

  • உளுந்து – ½ கப்
  • வெந்தயம் – 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கைப்பிடி

முடி வளர புரோட்டீன் ஹேர் பேக் செய்முறை:

  • உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை முதல் நாள் இரவே நீர் ஊற்றி ஊற வைக்கவும்.
  • அடுத்த நாள் அதை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி கொள்ளவும்.
  • இதை முடி மற்றும் மண்டையின் வேர் கால்களிலும் தடவலாம்.
  • 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
newஅக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..!

குறிப்பு:

  • தலைவலி, சளி, சைனஸ் இருப்பவர்கள் 15 நிமிடங்களுக்கு மேல் இந்த பேக்கை வைத்துக்கொள்ள வேண்டாம்.
  • வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம்.
  • இதை அலச மிதமான ஷாம்புவை பயன்படுத்தலாம்.

பலன்கள்:

  • தீவிரமான முடி உதிர்தல் பிரச்சனை இருந்தாலும் இந்த ஹேர் பேக் பயன்படுத்த சரியாகிவிடும்.

முடி உதிர்வது நிற்க – புரோட்டீன் ஹேர் மாஸ்க் 3

தேவையானவை:

  • வாழைப்பழம் – 1
  • தேங்காய்ப் பால் – 2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • பாதாம் எண்ணெய் – ½ டீஸ்பூன்

முடி வளர புரோட்டீன் ஹேர் பேக் செய்முறை:

  • இதை எல்லாவற்றையும் ஒரு பவுலில் போட்டு நன்கு மசித்து கூழாக்கி கொள்ளவும்.
  • தேவைப்பட்டால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளலாம்.
  • இதை முடி மற்றும் மண்டையின் வேர் கால்களிலும் தடவலாம்.
  • 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

முடி உதிர்வதை தடுக்க இயற்கை மருத்துவம் – குறிப்பு:

  • அனைவரும் பயன்படுத்த ஏற்றது.
  • இதை அலச ஷாம்பு, கண்டிஷனர்கூட பயன்படுத்தலாம்.

பலன்கள்:

  • அடங்காத முடியும் அடங்கும். முடி மிருதுவாக மாறும்.
  • முடி உதிர்தல் நிற்க இது சிறந்த பேக்.
  • முடியின் அடர்த்தியும் அதிகமாகும்.
  • கட்டுக்கு அடங்காத முடி உள்ளவர்களுக்கு, இந்த பேக்கால் நல்ல மாற்றம் தெரியும்.

முடி உதிர்வதை தடுக்க இயற்கை மருத்துவம் – புரோட்டீன் விட்டமின் ஹேர் மாஸ்க் 4

தேவையானவை:

  • செம்பருத்தி பவுடர் – 2 டீஸ்பூன்
  • நெல்லி – 4
  • தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • வாழைப்பழம் – ¼

முடி வளர புரோட்டீன் ஹேர் பேக் செய்முறை:

  • ஒரு பவுலில் வாழைப்பழத்தை போட்டு கூழாக்கி கொள்ளவும்.
  • அதில் நெல்லி ஜூஸை ஊற்றவும். நெல்லிக்காயை அறிந்து ஜூஸாக்கி வடிகட்டிதான் பயன்படுத்த வேண்டும்.
  • இதனுடன் செம்பருத்தி பவுடர், தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்டாக்கவும்.
  • இதை முடி, மண்டையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

பலன்கள்:

  • முடி உதிர்வது நிற்க சிறந்த இயற்கை மருந்து.
  • முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
  • முடியின் அடர்த்தியும் சீராகும்.
  • மிருதுவான முடியாக மாறும்.
newமுகப்பருவை போக்கும் வீட்டு மருத்துவம்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now