வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2 முறை அப்ளை செய்தால் போதும்..! முடி கட்டுக்கடங்காமல் காடுபோல் வளர்ந்துவிடும்..!

Updated On: April 15, 2023 5:41 AM
Follow Us:
Hair Growth Onion Hair Pack in Tamil
---Advertisement---
Advertisement

Hair Growth Onion Hair Pack in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முடி உதிராமல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை விட பெண்களுக்கு முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. அதனால் கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்ப்படுத்துவதை விட்டுவிட்டு இந்த பதிவில் கூறும் இயற்கையான முறையை ட்ரை செய்து பாருங்கள். கட்டுக்கடங்காமல் வளரும் உங்கள் முடியை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெங்காயம் எடுத்து கொள்ளவும்:

வெங்காயம் எடுத்து கொள்ளவும்

முதலில் சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

 வெங்காயத்தில் இருக்கும் சத்துக்கள் முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும். மேலும் பொடுகு தொல்லையை அடியோடு விரட்டிவிடும். முடிக்கு வலிமையை கொடுத்து முடி உதிர்வதை தடுக்கும் சக்தி வெங்காயத்தில் இருக்கிறது. அதனால் வெங்காயத்தை எடுத்து கொள்ளவும். 

தலையில் தடவி குளிக்க வேண்டாம் தொடர்ந்து 7 நாட்கள் தடவி வந்தால் நரைமுடி கருமையாக மாறிவிடும்

கடாயை அடுப்பில் வைக்கவும்:

கடாயை அடுப்பில் வைக்கவும்

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். தண்ணீர் சூடானதும் அதில் நாம் நறுக்கி எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை போட வேண்டும்.

வெங்காயத்தை தண்ணீருடன் நன்றாக கொதிக்க விட வேண்டும். வெங்காயம் நன்றாக கொதித்து அதன் நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

பின் அந்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான். வெங்காய ஹேர் பேக் தயார்.

அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த எண்ணெய் மட்டும் போதும்

பயன்படுத்தும் முறை:

இந்த நீரை உங்கள் தலையின் வேர் பகுதியிலிருந்து உங்கள் முடியின் நுனி பகுதி வரை அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 25 லிருந்து 30 நிமிடம் வரை அப்படியே வைத்திருந்து பின் தலையை அலசி கொள்ளவும். இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உங்கள் கிடுகிடுவென்று வளர்வதை நீங்களே காண்பீர்கள்.

👉 வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now