Hair Growth Faster Naturally
முடி நீளமாக வளரவில்லை என்ற கவலை யாருக்கு தான் இருக்காது. அதிலும் குறிப்பாக பெண்களை சொல்லவே வேண்டாம். அவர்கள் எப்போதும் மற்றவர்களை விட தனித்து தெரிய வேண்டும் என்று முகம் மற்றும் முடியை அதிகமாக பராமரித்து வருவார்கள். ஆனால் சில நேரத்தில் நாம் இத்தனை நாட்கள் முயற்சி செய்து செயல்கள் யாவும் பயன் இல்லாமல் போகிவிடும். இனிமேல் நீங்கள் முடி வளரவே மாட்டுது என்று நினைத்து கவலை பட வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்த மாதிரி முடி அசுர வேகத்தில் வளருவதற்கு ஒரு அருமையான குறிப்பை இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க..!மேலும் இந்த பதிவில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஒரு எண்ணெய் எப்படி தயார் செய்வது என்று தெரிந்துக்கொள்ளலாம்.
முடி நீளமாக வளர்வது எப்படி..?
வெங்காயத்தில் வைட்டமின் C, வைட்டமின் B6, வைட்டமின் D, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் கலோரிகள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை வைத்து எண்ணெய் தயாரித்து தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் முடி நீளமாக வளரும்.தேவையான பொருட்கள்:
- பெரிய வெங்காயம்- 2
- தேங்காய் எண்ணெய்- 1/2 கப்
- Essential Oil- 5 சொட்டு
இதையும் படியுங்கள்⇒ 3 நாட்களில் உங்கள் முகம் நிலவு போல் ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நிலவை விட அழகாக ஜொலிக்கலாம்..!
முடி வளர எண்ணெய் தயாரிக்கும் முறை:
Step- 1
முதலில் எடுத்துவைத்துள்ள வெங்காயத்தை நன்றாக தண்ணீரில் அலசி வைத்துக்கொள்ளுங்கள். பின்பு அந்த வெங்காயத்தை மிதமான அளவில் நறுக்கி வைத்து விடுங்கள்.
Step- 2
இப்போது நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். இதனை அரைப்பதற்கு தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது.
Step- 3
அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் பேஸ்டை சேர்த்து அதனுடன் 1/2 கப் தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
Step- 4
அடுப்பில் உள்ள பொருட்கள் இரண்டும் நன்றாக சேர்ந்து எண்ணெய் போன்ற பதத்திற்கு வரும் வரை 20 நிமிடம் வைத்து விடுங்கள்.
Step- 5
20 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் உள்ள எண்ணெயை சிறிது நேரம் ஆற வைத்து விடுங்கள். பின்பு எண்ணெய் ஆறியதும் ஒரு காட்டன் துணியில் ஆறவைத்துள்ள எண்ணெயை வடிகட்டி கொள்ளுங்கள்.
Step- 6
அதன் பின்பு வடிக்கட்டி வைத்துள்ள எண்ணெயை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் 5 சொட்டு Essential Oil சேர்த்து கலந்து கொள்ளுங்கள். Essential Oil வெங்காயம் வாசனை வராமல் இருப்பதற்காக சேர்க்க படுகிறது. அவ்வளவு தான் முடிக்கு எண்ணெய் தயார்.
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை நன்றாக முடியின் ஆழம் வரை செல்லும் அளவிற்கு அப்ளை செய்து மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி விரைவில் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நீளமாக வளரும்.
இதையும் படியுங்கள்⇒ முகத்தில் போகவே போகாதுனு இருந்த பருக்கள் உடனே போக இதை ட்ரை பண்ணுங்க…!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |