வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கையில் பிடிக்க முடியாத அளவிற்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Updated On: December 21, 2022 8:51 AM
Follow Us:
hair growth fenugreek seeds in tamil
---Advertisement---
Advertisement

அதிகமாக முடி வளர்வது எப்படி.? | How To Use Fenugreek Seeds For Hair Growth in Tamil

முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆண்களை விட பெண்கள் தான் ஆசைப்படுவார்கள். ஆண்கள் இருக்கின்ற முடி உதிர கூடாது என்று நினைப்பார்கள். முடி வளர்ச்சிக்காக கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தாதீர்கள். வீட்டில் அஞ்சறை பெட்டியில் இருக்கும் வெந்தயம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். மேலும் முடி உதிர்வதை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். இந்த வெந்தயம் ஹேர் பேக் செய்வது எப்படி என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl

Venthayam Hair Pack in Tamil:

How To Use Fenugreek Seeds For Hair Growth in Tamil

முதலில் உங்களின் முடிக்கு தேவையான அளவு வெந்தயம் எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். அதை மறுநாள் காலையில் ஊறிய வெந்தயம் மற்றும் ஊறிய தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அடுத்து இஞ்சி ஒரு துண்டு எடுத்து தோல் சீவி சிறியதாக நறுக்கி அதிலிருந்து சாறாக எடுத்து கொள்ளவும்.   இஞ்சி சேர்ப்பதால் சளி பிடிக்காது. மேலும் முடியில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். பொடுகு பிரச்சனை இருக்காது.  

பின் அரைத்து வைத்த வெந்தயம் பேஸ்ட்டில் இஞ்சி சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்ளோ தாங்க வெந்தயம் ஹேர் பேக் ரெடி..!

இதையும் படியுங்கள்⇒  முடி உதிர்வதை நிறுத்தி முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இந்த ஒரு பொருள் போதும்..!

இந்த பேக்கை அப்ளை செய்வதற்கு முன் தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்க வேண்டும். அதற்காக பேக் அப்ளை செய்வதற்கு முன் தலையில் வழிய வழிய எண்ணெயை தடவ கூடாது. முதல் நாளே தலையில் எண்ணெயை தடவி வைத்திருக்க வேண்டும்.

முடி சிக்கு இல்லாமல் இருக்க வேண்டும். அதன் பிறகு இந்த வெந்தயம் ஹேர் பேக்கை அப்ளை செய்து 20 நிமிடம் தலையில் வைத்திருந்து பிறகு தலையில் எந்த விதமான ஷாம்பும் அப்ளை செய்யாமல் தலையை அலச வேண்டும்.

ஏனென்றால், வெந்தயமே ஷாம்பும் போல தான் இருக்கும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் அப்ளை செய்யுங்கள். பொடுகு பிரச்சனை நீங்கி, முடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். 

இதையும் படியுங்கள்⇒ முடி நீளமா அடர்த்தியா வளர தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு எண்ணெய் சேர்த்து தலையில் தடவி போதும்!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now