முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா? | Hair growth foods in tamil

hair growth foods and vitamins

முடி வளர சாப்பிட வேண்டிய உணவு..! | Hair growth foods in tamil..!

Hair growth foods in tamil:- உறுதியான கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின் சத்துக்கள் மிகவும் அவசியம் அதேபோல் இரும்பு சத்து, துத்தநாகம், கொழுப்பு சத்து மற்றும் புரதச்சத்துக்களும் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த அனைத்து சத்துக்களும் முடி உதிர்வு பிரச்சனையை நீக்கி முடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும்.

சரி இந்த பதிவில் எந்த சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அந்த சத்துக்கள் எல்லாம் எந்த உணவுகளில் உள்ளது என்பதை பற்றி இந்தப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

newHair Growth Foods List in Tamil..!

முடி வளர வைட்டமின் உணவுகள் | hair growth foods tamil tips:-

Hair growth foods in tamil

முடி வளர தேவையான உணவு – Hair Growth Foods in Tamil Language

வைட்டமின் A:-

முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்? தலைமுடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ சத்து உதவுகிறது. இந்த வைட்டமின் சத்துக்கள் கேரட், பப்பாளி, அத்திப்பழம், ஆப்ரிகாட் ட்ரை ஃபுரூட்ஸ் போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

வைட்டமின் B5:-

கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின் B5 சத்து மிகவும் அவசியம். இந்த வைட்டமின் B5 சத்துக்கள் முட்டை, மஷ்ரும், சர்க்கரை வள்ளி கிழங்கு, காலிபிளவர் போன்ற உணவுகளில் அதிகளவு நிறைந்துள்ளது. இந்த உணவுகளை அதிகளவு தினமும் உட்கொள்வதினால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

வைட்டமின் C:-

வைட்டமின் சி உணவுகளை அதிகளவு உட்கொள்வதினால் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். இந்த வைட்டமின் சத்துக்கள் எலுமிச்சை, நெல்லிக்காய், முலாம்பழம், கொய்யா, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சி போன்ற பழங்களில் அதிகளவு நிறைந்துள்ளது.

இந்த பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு இயற்கையாகவே வைட்டமின் சி சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் கூந்தலின் வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வைட்டமின் E:-

அதேபோல் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள அவகோடா, ஆப்ரிகாட் (Apricot), பாதாம், wheat germ oil, சூரிய காந்தி விதைகள் போன்றவற்றில் அதிகளவு உள்ளது.

எனவே இவற்றையெல்லாம் தினமும் உட்கொள்வதன் மூலம்  முடி உதிர்வதை தடுப்பதோடு, தலைமுடியை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

முடி அடர்த்தியாக வளர புரோட்டின் உணவுகள்:-

Hair Growth Foods in Tamil – புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதினால் கூந்தலின் வளர்ச்சியை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்தலாம். புரோட்டின் முடியின் வேர் பகுதிக்கு வலுவினை சேர்க்கும்.

எனவே சாப்பிடும் உணவுகளில் முட்டையின் வெள்ளை கரு, சிக்கன், பருப்பு வகைகள், பசும் பால், பன்னீர் போன்றவற்றை அதிகளவு சேர்த்து கொள்ளுங்கள். இவற்றில் உள்ள புரதச்சத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

newகூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்…

முடி வளர்ச்சியை அதிகரிக்க இரும்பு சத்து:-

முடி உதிர்வு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் இரும்பு சத்து குறைபாடுதான். எனவே முடி அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர இரும்பு சத்து இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.

இந்த இரும்பு சத்துக்கள் பச்சை காய்கறிகளில் நிறைந்துள்ளது. முட்டைகோஸ், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரைகள், பச்சைபட்டாணி போன்ற உணவுகளில் அதிகளவு நிறைந்துள்ளது.

எனவே இவற்றையெல்லாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொள்வதினால் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தலைமுடி அடர்த்தியாக வளர ஒமேகா 3:-

தலைமுடி ஆரோக்கியமாக வளர ஒமேகா 3 மிகவும் சிறந்தது. இந்த சத்துக்கள் மீன், வால்நட்ஸ், ஆளி விதை, பாதாம் போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் உட்கொள்வதினால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Natural Beauty Tips