Hair Growth Hair Pack in Tamil
முடி நீளமாக வளர மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கவலைப்படும் பெண்களுக்கான பதிவு தான் இது. எல்லோருக்கும் முடி நீளமாக வேண்டும் என்பது தான் ஆசை. முடி நீளமாக எவ்வளவு தான் ட்ரை செய்வது என்று சிலர் அப்படியே விட்டு விடுவார்கள். இனி நீங்கள் முடி நீளமாக வளரவில்லை என்று கவலைப்படவும் வேண்டாம் மற்றும் கண்ட கண்ட ஹேர் பேக்கை முடிக்கு பயன்படுத்தி அதனை பாதியிலும் விடவும் வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி ஹேர் பேக் தயார் செய்து 100% Result தரும் ஒரு குறிப்பினை இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ உருளைக்கிழங்கை இப்படி கூட முகத்திற்கு பயன்படுத்தலாமா..! புதுசா இருக்கே..!
முடி நீளமாக வளர்வதற்கு:
30 நாட்களில் முடி நீளமாக வளர முதலில் ஒரு ஹேர் பேக் தயார் செய்ய வேண்டும். அதற்கான பொருட்கள் மற்றும் செய்முறைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- தேங்காய்- 1 மூடி
- ஆளி விதை- 6 ஸ்பூன்
- முட்டை- 2
ஹேர் பேக் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் ஒரு மூடி நல்ல தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு தேங்காய் மூடியில் இருக்கும் தேங்காய் ஓட்டினை தனியாக எடுத்து விடுங்கள். இப்போது அந்த தேங்காயினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள தேங்காயினை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு காட்டன் துணியில் இந்த தேங்காய் பாலினை ஊற்றி நன்றாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடி போட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 3
மறுநாள் காலையில் அந்த தேங்காய் பாலினை திறந்து பார்த்தால் கெட்டியான தயிர் போல இருக்கும். இப்போது அதில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி விட்டு அந்த தேங்காய் பால் பேஸ்டை மட்டும் ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் 6 ஸ்பூன் ஆளி விதையினை போட்டு நன்றாக 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 5
5 நிமிடம் கழித்த பார்த்தால் ஆளி விதை ஆயில் போன்ற பதத்திற்கு வந்துவிடும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு கொதித்த ஆளி விதையினை வடிகட்டி சிறிது நேரம் ஆற விடுங்கள்.
ஸ்டேப்- 6
ஆளி ஆயில் ஆறிய பிறகு எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் பேஸ்டை இதனுடன் சேர்த்து 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 7
5 நிமிடம் கழித்த கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் 2 முட்டையில் இருக்கும் வெள்ளை கருவினை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது நமக்கு தேவையான ஹேர் பேக் தயாராகிவிட்டது.
அப்ளை செய்யும் முறை:
உங்களுடைய தலையில் வழக்கமாக தடவும் தேங்காய் எண்ணெய் தடவி அதன் பிறகு நீங்கள் தயார் செய்த ஹேர் பேக்கை தலையின் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து குளித்து விடுங்கள்.
இது மாதிரி வாரத்திற்கு 2 முறை அப்ளை செய்து தலை குளித்தால் போதும் 30 நாட்களில் உங்களுடைய முடி நீளமாகவும் மற்றும் கருமையாகவும் வளர்ந்து இருப்பதை பார்ப்பீர்கள்.
இதையும் படியுங்கள்⇒ புருவ முடி அழகாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |