15 நாட்களில் முடி கொட்டிய இடத்தில் மீண்டும் புதிய முடிகளை வளர செய்யும்.. இதை மட்டும் தடவுங்கள்..

Advertisement

Hair Growth Home Remedies in Tamil

பெண்கள் அனைவருக்குமே தலைமுடி நன்கு அடர்த்தியாக மற்றும் நீளமாக முடி வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக நிறைய வகையான குறிப்புகளையும் ட்ரை செய்திருப்பார்கள். இருப்பினும் சில வகை டிப்ஸ் ஓரளவு ரிசல்ட் கொடுத்திருக்கும், சிலவகையான டிப்ஸ் எந்த ஒரு ரிசல்ட்டையும் கொடுத்திருக்காது. முடி வளர்ச்சிக்கு அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இன்று ஒரு அருமையான Hair Growth டிப்ஸை பற்றி தான் பார்க்க உள்ளோம். அதாவது தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுவதில் வெந்தயம் ஒரு சிறந்த பொருள் ஆகும். இந்த வெந்தயத்தை பயன்படுத்தி ஒரு அருமையான ஹேர் ஆயில் தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்
  2. விளக்கெண்ணெய் – 8 டேபிள் ஸ்பூன்
  3. தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் நான்கு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதனை சல்லடையால் சலித்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அரைத்த வெந்தயம் பவுடரை ஒரு பாட்டிலில் சேர்க்கவும், பின் அதில் விளக்கெண்ணெய் 8 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

பின் இந்த கலவையை மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின் தலைக்கு பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

வெந்தயம்

வெயிலில் மூன்று நாட்கள் வைத்தெடுத்த பிறகு நீங்கள் தலைக்கு அப்ளை செய்யலாம். அதாவது இந்த எண்ணெயை தலையில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள் பிறகு 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும்.

பின் தலைக்கு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை அலசலாம். இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை தலைக்கு பயன்படுத்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரை முடி ஒரே வாரத்தில் கருமையாக தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவுங்க

பயன்கள்:

வெந்தயம் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது, மேலும் இவற்றில் இருக்கும் ஒரு வேதி பொருள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவி செய்கிறது. மேலும் முடிக்கு ஒரு ஷைனிங் லுக்கை இயற்கையாகவே வெந்தயம் வழங்குகிறது.

தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனையை குணப்படுத்தும். முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவி செய்யும். இந்த ஆயிலை ஆண், பெண் இருவருமே தலைக்கு பயன்படுத்தலாம்.

இருப்பினும்  சைனஸ், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement