வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மலை பாம்பு போல் அடர்த்தியாக முடி வளர வாரத்திற்கு 1 முறை இதை செய்யுங்கள்..!

Updated On: April 18, 2023 1:35 PM
Follow Us:
Hair Growth Home Remedy Faster in Tamil
---Advertisement---
Advertisement

அடர்த்தியாக முடி வளர்வது எப்படி..?  –  Hair Growth Home Remedy Faster in Tamil..!

ஆண்கள், பெண்கள் என்று இருவருக்கும் இருக்கின்ற ஒரே பிரச்சனை தான் இந்த முடி உதிர்வு பிரச்சனை. இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கு என்ன தான் பல செயற்கை முறைகள் இருந்தாலும், அவையெல்லாம் நல்ல பலன் அளித்துவிடுமா என்றால் நிச்சயம் இல்லை. அவற்றை பயன்படுத்தினால் பல வகையான பின் விளைவுகளை தான் சந்திக்க வேண்டியதாக இருக்கும். இருந்தாலும் இந்த முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பதிவுகளை Pothunalam.com பதிவில் பதிவிட்டு வருகிறோம். ஆகவே அதனை தினமும் படித்து தெரிந்துகொள்ளவும். அதற்கு முன் இந்த ஹேர் பேக் எப்படி செய்வது எதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Growth Home Remedy Faster in Tamil:

இன்று நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் முருங்கக்கீரை. இந்த கீரையில் நிறைய வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இது நம்முடைய முடியில் உள்ள வெடிப்புகளை குறைக்கும். முடி வளரவைக்கும். ஆகவே அதனை உருவி கழுவி மிக்சி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஊறவைத்த வெந்தயத்தை எடுத்துகொள்ளவும். வெந்தயத்தை நாம் வெயில்காலத்தில் எடுத்துக்கொண்டால் உடலின் சூட்டை குறைக்கும். இது அனைவருக்கும் இருக்கும் பொடுகை குறைக்கும். அதேபோல் இதில் வைட்டமின் கே அதிகம் உள்ளதால் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

இப்போது இரண்டையும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதில் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை சேர்க்கவும்.

பத்தே நாட்களில் உங்க முடி கிடுகிடுன்னு வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்

அரைத்த பேஸ்டை அப்படியே பயன்படுத்தாமல் அதனை வடிகட்டி வைத்து வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும்.

அடுத்து அந்த பேஸ்ட்டில் வேப்ப எண்ணெய் கலந்துகொள்ள போகிறோம். இதில் நிறைய சத்துக்கள் உள்ளது. அதேபோல் இதனை நாம் பயன்படுத்துவதால் தலையில் உள்ள பேன், பொடுகு, என அனைத்திற்கும் நல்ல தீர்வாக இது இருக்கும். எனவே இந்த எண்ணெய்யை 1.1/2 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளவும். இது மூன்றையும்  கலந்துகொள்ளவும்.

அடுத்து தலை முடியை இரண்டு பக்கமாக பிரித்துக்கொண்டு அதில் நன்கு அப்ளை செய்யவும். அப்போது தலையில் நன்கு படியும். அதன் பின்பு 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு ஷாம்பு சீயக்காய் போட்டு குளிக்கவும். அவ்வளவு தான் இதனை தொடர்ந்து வாரம் வாரம் செய்து வருவதன் மூலம் அடர்த்தியாக வளரும்.

6 மாதம் இதை செய்தால் உங்களின் முடி எப்படி இருந்தாலும் அதனை அடர்த்தியாக மாற்றலாம் 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை