முடி காடு போல வளர இந்த எண்ணெயை யூஸ் பண்ணி பாருங்க…

Advertisement

Hair growth in tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் முடி அடர்த்தியாக வளருவதற்கான ஒரு  அருமையான குறிப்பு பற்றித்தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் முடி கொட்டுவது ஒரு பிரச்சனையாக இருக்கிறது. சிலர்க்கு தினமும் தலை சீவும் பொழுது முடி வேர்களுடன் வருகிறது, இதை பார்த்தாலே கவலை அதிகமாக இருக்கும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு அருமையான எண்ணெய் தயாரிப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம், இந்த ஒரு எண்ணெய்  இருந்தாலே போதும் முடி அடர்த்தியாக வளர்வது மட்டுமில்லாமல், முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது, மேலும் இந்த எண்ணெய்யை எப்படி  செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

ஆண்கள் தலை முடியை பராமரிக்கும் பொழுது செய்யும் சில தவறுகள்

கற்றாழை எண்ணெய் செய்வதற்கு தேவைப்படும் பொருள்:

  • சோற்றுக்கற்றாழை-3 
  • தேங்காய் எண்ணெய்-200 கிராம் 
  • இஞ்சி -1 துண்டு 
  • மிளகு-1 ஸ்பூன் 
  • கருவேப்பிலை 

சோற்றுக்கற்றாழை எண்ணெய் செய்வது எப்படி?

ஸ்டேப்:1

முதலில் மூன்று கற்றாழையை எடுத்துக்கொண்டு, அதன் பிறகு அந்த கற்றாழையை நறுக்கிய பிறகு அதன் அடிபகுதியில் மஞ்சள் நிறத்தில் உள்ள ஜெல் வடிந்த பிறகு, அதனுடைய தோல்களை நீக்கி கொண்டு, அந்த கற்றாழையில் உள்ள ஜெல்களை எடுத்தது கொண்டு அதை கட் செய்து ஒரு குட்டி கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளவும்.

ஸ்டேப்:2

அடுத்ததாக இன்னொரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளவும், அதன் பிறகு ஒரு இஞ்சி எடுத்து தோல்களை நீக்கி விட்டு, சுத்தமான தண்ணீரில் கழுவிக்கொண்டு, கற்றாழை ஜெல்லில் அந்த இஞ்சி துண்டுகளை சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

ஸ்டேப்:3

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் எடுத்து வைத்த கற்றாழை ஜெல் மற்றும் இஞ்சியை சேர்த்து நன்றாக அரைத்த பிறகு ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளவும்

ஸ்டேப்:4

அடுத்ததாக ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதில் தேங்காயை எண்ணெய்யை முதலில் சேர்க்க வேண்டும், சேர்த்த பிறகு அரைத்து வைத்த கற்றாழை சாற்றையும் அதில் சேர்க்க வேண்டும்.

ஸ்டேப்:5

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கரண்டியை வைத்து கிண்டிக்கொன்டே இருக்க வேண்டும். அடுத்ததாக அதில் மிளகு சேர்த்துக்கொள்ள வேண்டும், மிளகு சேர்ப்பதால் முடியில் உள்ள பூச்சி கடி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

ஸ்டேப்:6

எண்ணெய் பதம் வரும் வரை மிதமான சூட்டில்வைத்து  கிண்டி கொன்டே இருக்க வேண்டும், நன்றாக  காய்ந்த பிறகு அதில் ஒரு கொத்து கருவேப்பிலையை அதில் சேர்த்து நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும்.

கற்றாழை எண்ணெய் பயன்கள்:

இந்த கற்றாழை  எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால்,  முடி வளர்ச்சியில்  நல்ல அடர்த்தியை கொடுக்கிறது. அதோடு இதில் சேர்க்கப்பட்ட இஞ்சி முடியின் வேர்களில் படும்பொழுது, பேன் கடி, பொடுகு போன்ற எல்லா விதமான பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு உதவியாக இருக்கிறது,  இந்த எண்ணெய்யை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement