Hair Growth Natural Tips in Tamil
முடி கொட்டுவது என்பது அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆண் பெண் என்று இருவருக்குமே முடி கொட்டும் பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதனால் நம் முடிக்கு மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு பிரச்சனையை நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
முடி கொட்டுவது நீங்க டிப்ஸ்:
- முட்டை – 1
- கற்றாழை – 2
- தேங்காய் – 1 மூடி
ஸ்டேப் -1
முதலில் ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காவை போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளுங்கள். பின் அதில் இருந்து தேங்காய் பாலை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பின் மிக்சி ஜாரில் கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்து சேர்த்து கொள்ளுங்கள். பின் அதில் 1 முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். இந்த இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 மடங்கு முடி வளர்ச்சிக்கு இதை மட்டும் Follow பண்ணுங்க
ஸ்டேப் -3
பின் நாம் அரைத்து வைத்துள்ள கலவையில் தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -4
பின் இதை தலையின் அடிப்பகுதி வரை நன்றாக தடவ வேண்டும். 20 லிருந்து 30 நிமிடம் வரை தலையில் அப்படியே இருக்கட்டும். 30 நிமிடம் கழித்து தலையை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காயை பயன்படுத்தி தேய்த்து குளிக்கலாம்.
இதுபோல வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்றுவிடும். தேங்காய் பாலில் இருக்கும் சத்துக்கள் முடியை அடர்த்தியாக வளர செய்யும். கற்றாழை மற்றும் முட்டை சேர்ப்பதால் முடி பளபளப்பாக இருக்கும். முடியும் நன்றாக வளரும்.
வாரம் 2 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடி கருமையாகவே இருக்கும்..! |
முடி 3 மடங்கு அடர்த்தியாக வளர:
- தேங்காய் எண்ணெய் – 400 ml
- வெந்தயம் – 1 ஸ்பூன்
- கருவேப்பிலை – 3 கைப்பிடி அளவு
ஸ்டேப் -1
முதலில் மிக்சி ஜாரில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து தூளாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பின் அதே மிக்சியில் 3 கைப்பிடி அளவு கருவேப்பிலையை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -3
பின் அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து அதில் 400 ml தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருவேப்பிலையை போட்டு கொதிக்க விட வேண்டும்.
வெறும் 2 வாரம் பொடுகு தொல்லை, முடி கொட்டுவது, நரை முடி அனைத்திற்கும் ஒரே தீர்வு இது தாங்க..! |
ஸ்டேப் -4
அடுப்பை குறைத்து வைத்து 15 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். எண்ணெய் கொதிப்பது அடங்கியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும். பின் எண்ணெயை ஆறவிட வேண்டும்.
ஸ்டேப் -5
எண்ணெய் ஆறியதும் அதை வடிகட்டி அந்த எண்ணெயை ஏதாவது ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.
இந்த எண்ணெயை இரவு தூங்க போகும் முன் நாம் எப்பொழுதும் எண்ணெய் தடவுவது போல தலையில் தடவி கொள்ள வேண்டும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் தலையை ஷாம்பு போட்டு குளிக்கலாம். இதுபோல செய்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும். முடி கருமையாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு பொருள் போதும் உங்கள் வெள்ளை முடி மற்றும் செம்பட்டை முடியை கருமை ஆக்கிடும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |