வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும்..!

Updated On: July 22, 2024 12:41 PM
Follow Us:
Hair Growth Thicker And Longer Home Remedies in Tamil
---Advertisement---
Advertisement

Hair Growth Thicker And Longer Home

வணக்கம் வாசகர்களே..! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் பருக்கள், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் வருவது இயற்கை தான். ஆனால் நாம் அந்த பிரச்சனை சரி செய்ய என்ற நோக்கத்தில் கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இதனால் நாளடைவில் மேலும் பல பிரச்சனைகள் வந்துவிடுகிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் முடி போதுமானதாக இருக்கும். ஆனால் முடி நீளமாக வளர வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதால் இருக்கின்ற முடியும் கொட்டி விடுகிறது. அந்த வகையில் இன்று மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Hair Growth Thicker And Longer Home Remedies in Tamil:

  1. தேங்காய் எண்ணெய் – 100 ml 
  2. வெந்தயம் – 1/2 கப்
  3. கருஞ்ஜீரகம் – 1/2 கப்
  4. கருவேப்பிலை – 1 கைப்பிடி

மிக்சி ஜாரை எடுக்கவும்: 

வெந்தயத்தை எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும். பின் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் வெந்தயத்தை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அதே மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள கருஞ்சீரகத்தை போட்டு பொடியாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளலாம்.

7 நாட்களில் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்  அதுக்கு இந்த எண்ணெய் மட்டும் போதும் 

கடாய் எடுத்து கொள்ளவும்: 

அடுத்து ஒரு கடாயை எடுத்து அதை அடுப்பில் வைக்கவும். பின் அதில் நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயை 100 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு ஊற்றி கொள்ள வேண்டும்.

எண்ணெய் சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரக தூளை போட வேண்டும். பின் எண்ணெய் பொங்கி வரும். அதை கலந்து விட வேண்டும்.

இறுதியாக கருவேப்பிலை 1 கைப்பிடி அளவு போட்டு எண்ணெய் கொதிப்பது அடங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்துவது போல தடவி வர வேண்டும். இதுபோல செய்து வந்தால் மெலிந்த உங்கள் முடி அடர்த்தியாக மாறுவதை நீங்களே காண்பீர்கள்.

முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறதா அப்போ வெங்காயம் மட்டும் போதும் உதிர்ந்த முடி அனைத்தும் வளர்ந்துவிடும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now