பேன் பொடுகு தொல்லை நீங்க | Hair Oil For Dandruff At Home in Tamil
பொதுவாக பெண்கள் எல்லோருக்கும் தனது முடி கொட்டாமல் அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக அவர்கள் பலவிதமான ஷாம்பு, ஹேர் ஆயில் போன்றவற்றை பயன்படுத்தி இருப்பர்கள். ஆனால் முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் தலையில் உள்ள பொடுகும் பேனும் தான்.
நமது தலையில் பொடுகு பேன் இல்லாமல் வைத்திருந்தாலே போதும் முடி உதிராமல் நன்றாக வளரும். அப்படி பொடுகும் பேனும் இல்லாமல் வைத்திருக்க வீட்டிலே ஒரு எண்ணெய் தயாரிக்கலாம். வாருங்கள் அந்த எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
பொடுகு நீங்க எளிய முறை:
முதலில் ஒரு பாதி அளவு கற்றாழையை எடுத்து அதன் இருபுறமும் இருக்கும் முள் பகுதியை நீக்கி விடுங்கள். பிறகு 2 கைப்பிடி வேப்பிலையை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள்.
அதன் பின் இரண்டு பாத்திரங்களை எடுத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரம் சிறியதாகவும் மற்றொரு பாத்திரம் பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவும். ஏனென்றால் எண்ணெயை நேரடியாக சூடுபடுத்தக்கூடாது.
அடுப்பில் பெரிய பாத்திரத்தை வைத்து அதில் பாதியளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். தண்ணீர் கொஞ்சம் சூடானதும் சிறிய பாத்திரத்தை பெரிய பாத்திரத்திற்குள் வைக்க வேண்டும்.
இப்படி வைத்த பிறகு, அந்த சிறிய பாத்திரத்தில் 150 மில்லி அளவிற்கு தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனுடன் கற்றாழையை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அதன் பின் சுத்தம் செய்து வைத்த வேப்பிலையை சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
ஒரே வாரத்தில் முடி பயங்கரமா கால் வரை வளரணுமா? அப்போது இதை மட்டும் பண்ணுங்க..! |
வேப்பிலையை சேர்க்கும் போது வேப்பிலையில் தண்ணீர் இல்லாமல் நன்றாக துடைத்து விட்டு சேர்க்க வேண்டும். இவை கொதிக்கும் போது ஒரு கரண்டி வைத்து கலந்து விடுங்கள்.
இந்த எண்ணெய் நன்றாக கொதித்ததும் இறக்கி ஆற வையுங்கள். பிறகு ஆறியதும் இதை ஒரு கண்ணாடி டப்பாவில் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
இதை நீங்கள் தினமும் தலையில் தேய்க்கலாம் அல்லது நீங்கள் தலை குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே தலையில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள்.
பிறகு 1 மணிநேரம் கழித்து தலை அலசி விடுங்கள். இதே போல் மாதத்திற்கு 3 முறை செய்து வந்தால் பொடுகு பேன் நீங்கி முடி நன்றாக வளரும்.
கருவேப்பிலையில் இந்த எண்ணெயை கலந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும் |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |