Hair oil for Hair Growth in Tamil
பெண்களுக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சனையே முடி உதிர்வு பிரச்சனை தான். என்னதான் ட்ரை செய்தாலும் முடி வளரவே வளராது. மேலும் சிலருக்கு முடி உதிவு பிரச்சனை இருக்காது இருந்தாலும் முடி வளரவே வளராது அப்படியே இருக்கும். இந்த இரண்டு பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கும். ஆம் நண்பர்களே வளராத முடியை வளர செய்யும் ஒரு அருமையான ஹேர் ஆயில் தயாரிப்பு பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க அந்த ஹேர் ஆயில் தயாரிக்கும் முறையை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
- ஒற்றை செம்பருத்தி பூ – 20
- செம்பருத்தி இலை – 15 to 20
- மஞ்சள் அல்லது வெள்ளை கரிசலாங்கண்ணி – ஒரு கைப்பிடியளவு
- பெரிய நெல்லிக்காய் – 4
- கற்றாழை – ஒரு மடல்
- வேப்பிலை – 1/2 கையளவு
- மருதாணி – ஒரு கையளவு
- கருவேப்பிலை – ஒரு கையளவு
- வெந்தயம் – 10 கிராம்
- கருஞ்சீரகம் – 10 கிராம்
- அவுரி இலை அல்லது பொடி – இலையாக இருந்தால் இரண்டு கையளவு – பொடியாக இருந்தால் மூன்று ஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 3 ஸ்பூன்
ஹேர் ஆயில் செய்முறை – Hair oil for Hair Growth in Tamil:
ஸ்டேப்: 1
முதலில் கற்றாழையை இரண்டு பக்கங்களில் உள்ள நுனிகளை லேசாக சீவிவிட்டு சிறிது நேரம் அப்படியே வைத்திருங்கள். சிறிது நேரம் கழித்து அதனை பார்த்தால் அவற்றில் இருந்து ஒரு மஞ்சள் நிறத்தில் திரவம் வரும் அது முழுமையாக வந்தவுடன் தண்ணீர் அலசிக்கொள்ளுங்கள்.
பிறகு அவற்றில் இருக்கும் தோல்பகுதியை முழுமையாக அகற்றிவிட்டு அவற்றில் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
அதன் பிறகு நெல்லிக்காயை எடுத்து அவற்றில் உள்ள விதைகளை மட்டும் நீக்கிவிட்டு, சதையை ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
சரி இப்பொழுது எண்ணெய் தயார் செய்ய ஆரம்பிப்போம். ஒரு பெரிய மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒற்றை செம்பருத்தி பூ, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், கற்றாழை ஜெல், வேப்பிலை, மருதாணி, கருவேப்பிலை, வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை அரிது கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
ஒரு முறை அரைத்த பிறகு மிக்ஸி ஜாரை திறந்து அவற்றில் அவுரி பொடியை சேர்க்கவும் குறிப்பாக இவற்றை அரிக்கும் போது தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. தண்ணீருக்கு பதில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆக தேங்காய் எண்ணெய் சிறிதளவு ஊற்றி நன்றாக அறிந்துகொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉
ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது
ஸ்டேப்: 5
இபொழுது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவகற்றில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தவும்.
ஸ்டேப்: 6
எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும்.
ஸ்டேப்: 7
கலவையை எண்ணெயில் சேர்த்தவுடன் பப்பிள்ஸ் போல் வரும், ஆக அடுப்பை மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறிவிடுங்கள். பப்பிள்ஸ் முழுமையாக அடங்கியது அடுப்பை அணைக்கவும்.
ஸ்டேப்: 8
அடுப்பை அணைத்தவுடன் மூன்று ஸ்பூன் விளக்கெண்ணையை சேர்த்து ஒரு முறை கிளறிவிடுங்கள். பிறகு 8 மணி நேரம் அப்படியே நன்றாக ஊறட்டும் இதற்கு மூடி போட வேண்டாம். 8 மணி நேரம் கழித்து எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் பிரண்ட்ஸ் எண்ணெய் தயார் செய்யும் முறை. இந்த எண்ணெயை நீங்கள் கூந்தல் எண்ணெயாக தினமும் பயன்படுத்தி வரலாம். இதை தினமும் பயன்படுத்துவதினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும், முடி கருமையாக அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். இளநரை பிரச்சனை சரி ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முன் நெற்றியில் மட்டும் வெள்ளை முடி உள்ளதா? கவலைப்படாதீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |