30 நாள் challenge முடியை இரண்டு மடங்கு வேகமாக வளர வகைக்கும் ஹேர் ஸ்ப்ரே..!

முடி வளர ஹேர் ஸ்ப்ரே | Hair Spray for Hair Growth in Tamil

Hair Spray for Hair Growth in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் முடி உத்திரவை தடுக்கக்கூடிய ஒரு அருமையான ஹாம் ரெமடியை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த ஒரு ஹாம் ரெமடியை நீங்கள் எப்போது எல்லாம் தலை அலசுகின்றிர்களோ, அப்போது எல்லாம் தலை அலசிய பிறகு இந்த ஹேர் ஸ்பிரேவை தலையில் அங்கு அப்ளை செய்த பிறகு மீண்டும் தலை அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் தலை முடி நன்கு போஷாக்குடன் வளர்ச்சி அடையும். மேலும் முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை அனைத்தும் விலகும். சரி வாங்க இந்த ஹேர் ஸ்ப்ரே எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. பெரிய நெல்லிக்காய் – இரண்டு
  2. வெந்தயம் – ஒரு ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் – 10
  4. பூண்டு – இரண்டு பல்
  5. கருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
  6. தண்ணீர் – தேவையான அளவு

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
ஹர் டையை தூக்கி போடுங்க.! இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம் 100% ரிசல்ட்

தயாரிக்கும் முறை – Hair Spray for Hair Growth in Tamil:

முதலில் பெரிய நெல்லிக்காயை எடுத்து கொள்ளுங்கள். அதில் உள்ளை விதையை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காயை சேர்க்கவும்.

பின் அதனுடன் கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, வெந்தயம் மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதனை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள்.

 

பிறகு தலையில் அதாவது தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக ஸ்ப்ரே செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு அரைமணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் வெறுமென தலை அலச வேண்டும்.

இந்த முறையை நீங்கள் எப்போதெல்லாம் தலை குளிக்கிறீர்களோ அதற்கு அடுத்த நாள் பின்பற்றலாம். குறிப்பாக தலையில் ஸ்ப்ரே அடிக்கும்போது தலையில் எண்ணெய் தடவி இருக்க கூடாது.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
அரை மணி நேரத்தில் வெள்ளை முடி இயற்கையாக கருமையாக மாற்றும் ஹேர் டை..!

பயன்கள் – Homemade Hair Spray for Hair Loss in Tamil:

நெல்லிக்காய்:

பெரிய நெல்லிக்காயில் வைட்டமின் C அதிகமாக இருக்கிறது. இது நமது தலைமுடியின் வேர் பகுதிக்கு மிகவும் வலிமை அளிக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.

வெந்தயம்:

வெந்தயம் நமது உடலை குளிர்ச்சியாக்கும், மேலும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவி செய்கிறது.

பூண்டு:

பூண்டில் ஆன்டி பாக்டீரியால் தன்மை அதிகமாக இருக்கிறது. ஆக பூண்டு தலைமுடியின் வேர் பகுதிகளுக்கு எந்த ஒரு பிரச்சனை வராமல் தடுக்கும்.

சின்ன வெங்காயம்:

சின்ன வெங்காயத்தில் அதிகளவு சல்பர் இருக்கிறது, இது நமது தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனையை சரி செய்து, முடி உதிர்வை தடுத்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவி செய்யும்.

கருவேப்பிலை:

கருவேப்பிலை

கருவேப்பிலை பொதுவாக புதிய முடிகளை வளர செய்யும், மேலும் வளரும் முடியை கருமையாக மற்றும் அடர்த்தியாக வளர செய்யும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெள்ளை முடியை கண்டு கவலை வேண்டாம்.. இந்த ஹேர் டையை பயன்படுத்துங்கள் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil