வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி? (இயற்கை அழகு குறிப்புகள்)..!
Hair Straightening At Home Naturally In Tamil..!
இயற்கை அழகு குறிப்புகள் – இப்போதெல்லாம் முகத்தை விட தலைக்கு அழகுப்படுத்திக்கொள்வது என்பது இன்றைக்கு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. குறிப்பாக கூந்தலை ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு, அதிகமாக அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர், இருந்தாலும் அழகு நிலையங்களுக்கு சென்று ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்தாலும் அதற்கு தகுந்த பராமரிப்பு இருந்தால் தான் தலைமுடி நேராக இருக்கும்.
அதேபோல் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்ய பயன்படுத்தும் கருவிகளின் விளைவுகளினால் சிலருக்கு அதிக முடி உதிர்வு ஏற்படும். மேலும் பல பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
எனவே நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள முடியும். இயற்கையான முறைகள் நாம் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதனால் நமக்கு என்ன ஒரு பிரச்சனைகளையும் ஏற்படாது.
இயற்கை அழகு குறிப்புகள் – சரி வாங்க நம்ம வீட்டிலேயே எளிமையான முறையில் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் (Hair Straightening At Home Naturally In Tamil) செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் – ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்ய தேவையான பொருட்கள்:
- சோளமாவு அல்லது மைதா மாவு – இரண்டு ஸ்பூன்
- தேங்காய் பால் – 1/2 கப்
- சாதம் வடித்த கஞ்சி – 1/2 டம்ளர்
- வாசலின் – 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன்
இயற்கை அழகு குறிப்பு – ஹேர் ஸ்ட்ரெய்டனிங் பேக் செய்முறை:
இயற்கை அழகு குறிப்புகள் – ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் சோளமாவு அல்லது மைதா மாவு சேர்த்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
இதனுடன் சாதம் வடித்த கஞ்சி 200 மில்லி மற்றும் தேங்காய் பால் 1/2 டம்ளர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கலந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கட்டிகள் விழாதவாறு கிளறிவிடவும்.
கலவை நன்றாக கெட்டியானதும், 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன் வாசலின் கலந்து கலவையை ஆறவிடவும்.
சரி ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு பேக் தயார் செய்துவிட்டோம், இந்த பேக்கை தலையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு:
இந்த பேக்கை பயன்படுத்தும் போது தலை முடியில் எண்ணெய் பசை இருக்க கூடாது, ஆகையால் முதல் நாளே தலைமுடியை நன்கு அலசி, எண்ணெய் பசை இல்லாதவாறு தலை முடியை வைத்து கொள்ளவும்.
தயாரித்த பேக்கை பயன்படுத்தும் முறை:
தயாரித்த பேக் ஆறியதும் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும், அதாவது தலைமுடியின் உச்சந்தலையில் இருந்து நுனி முடி வரை நன்றாக இந்த பேக்கை(hair straightening at home naturally in tamil) அப்ளை செய்ய வேண்டும்.
இவ்வாறு நன்றாக அப்ளை செய்த பிறகு சீப்பை பயன்படுத்தி தலைமுடியை நேராக சீவிவிட வேண்டும். பின்பு இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பின்பு தலைமுடியை ஷாம்போ போட்டு அலசி விடுங்கள் இவ்வாறு செய்வதினால் நாம் இயற்கையான முறையில் மிக எளிமையாகவே தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங்(hair straightening in tamil) செய்து விட முடியும்.
நண்பர்களே இந்த இயற்கை அழகு குறிப்புகள் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள், அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வணக்கம்..!
இதுபோன்று ஆண்கள் அழகு அதிகரிக்க அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |