முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் | Hair Thickness Pack in Tamil
அடர்த்தியாக முடி வளர்வதற்கு வைட்டமின் சத்துக்கள் அதிம் தேவைப்படும். அதை விட மிகவும் இரும்பு சத்துகள் தேவை. அதேபோல் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருந்தால் தலைமுடி உதிர்வதற்கு வாய்ப்பே இருக்காது.
உடலுக்கு தேவையான சத்துக்கள் மட்டும் இருந்தால் போதுமானது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தலைமுடியை எப்படி பார்த்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்து தான் தலை முடி வளர செய்யும். ஆகவே முடியை சரியாக கவனித்துக்கொள்வது நல்லது. இந்த பதிவின் வாயிலாக தலை முடி அடர்த்தியாக வளர வைக்க சூப்பராக ஹேர் பேக் பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Hair Thickness Pack in Tamil:
முதலில் நாம் எடுத்தகொள்ள போகும் பொருள் தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின், பொட்டாசியம் நம்முடைய முடிக்கும் நல்ல வலிமையை கொடுக்கும். ஆகவே இந்த ஹேர் பேக்கிற்கு இரண்டு செவ்வாழை பழத்தை எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து தேங்காய் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதனை அப்படியே 10 மணி நேரம் வைக்கவும். அதில் இருக்கும் கிரீம் மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
நீங்களே வியந்து பார்க்கும் அளவிற்கு முடி நீளமாக வளர இந்த ஒரு பொருளை மட்டும் போதும்
இப்போது இந்த இரண்டு பொருளையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பிறகு இதில் எந்த வித தண்ணீரும் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
அதன் பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளளவும். அதன் கூடவே ஆலிவ் ஆயில் சேர்க்க போகிறது. இதில் 1/2 ஸ்பூன் கலந்து இப்போது அனைத்தும் சேர்த்து நன்கு கலந்துவிடவும். அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி.
பயன்படுத்தும் முறை:
முதலில் தலையில் எண்ணெய் தடவி கொள்ளவும், எண்ணெயை முதல் நாள் இரவே அப்ளை செய்யவும். அதன் பிறகு இந்த ஹேர் பேக் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவிட்டு பின் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்கவும்.
தலை சீவினாலும் மண்டை வெளியில் தெரிகிறதா அப்படி என்றால் இதை மட்டும் Follow பண்ணுங்க
| இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tmil |














