உங்களுக்கு முடி அதிகமாக கொட்டுதா..? அப்போ இந்த மசாஜ் செய்யுங்க..!

Advertisement

How To Massage Scalp For Hair Loss

முடி பல காரணங்களினால் உதிர்கிறது. முடி உதிர்விற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், தூக்கமின்மை, சரியாக சாப்பிடாமல் இருப்பது, அதிகமான வெப்பம் போன்றவை தான். எனவே இதனை தடுக்க ஹேர் பேக், ஹேர் ஆயில், மசாஜ் போன்ற பல வலிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஹேர் மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வு, மன அழுத்தம் போன்றவற்றை சரி செய்யலாம். முடிக்கு சரியான அளவில் எண்ணெய் சத்து கிடைக்காமல் இருப்பதால் தான் அதிகம் முடி கொட்டுக்கிறது.

எனவே நாம் முடிக்கு எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் வலுவடைந்து முடி உதிர்வதை தடுக்கலாம். ஓகே வாருங்கள், முடி உதிர்வை தடுக்க எண்ணெய் மசாஜ் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

Head Massage To Prevent Hair Loss in Tamil:

 how to prevent hair loss scalp massage in tamil

மசாஜ் ஹேர் ஆயில் -1

தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய்- 100 மிலி
  • தேங்காய் எண்ணெய்- 100 மிலி
  • ஆலிவ் எண்ணெய்- 100 மிலி

மேலே சொல்லப்பட்டுள்ள அளவுகள் இல்லாமல் உங்களுடைய முடிக்கு தேவையான அளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

How to Use Hair Massage Oil:

முதலில் ஒரு கிண்ணத்தில் உங்களுடைய முடியின் அளவிற்கு தேவையான அளவில் ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த மூன்று எண்ணெய்களையும் நன்றாக கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக படும்படி அப்ளை செய்து கொள்ளுங்கள்.

பிறகு, உங்கள் இரு கைகளினால் வட்ட வடிவில் தலையில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் வரை மசாஜ் செய்து வரலாம்.

 how to massage scalp for hair loss

இந்த முறையை நீங்கள் தலை குளிப்பதற்கு முன்பு பயன்படுத்தலாம். இம்முறையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் தலையில் உள்ள பலமில்லாத முடிகள் உதிர்ந்து, மேலும் அதே இடத்தில் புது முடி அடர்த்தியகாவும் கருமையாகவும் வளரும்.

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

மசாஜ் ஹேர் ஆயில் -2

தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
  • மிளகு- 1/4 ஸ்பூன்
  • சீரகம்- 1/4 ஸ்பூன்
  • பூண்டு- 1 பல்லு
  • சுக்கு- சிறிய துண்டு

How to Use Hair Massage Oil:

முதலில் சுக்கு மற்றும் பூண்டினை உரலில் சேர்த்து லேசாக நச்சு எடுத்து கொள்ளுங்கள். 

இப்போது, அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து நல்லெண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் மிளகு, சீரகம், நச்சு வைத்த சுக்கு மற்றும் பூண்டு துகள்களை சேர்த்து கொள்ளுங்கள்.

 how to make hair massage oil at home

அதன் பின், அடுப்பின் தீயை குறைவான அளவில் வைத்து, இதனை 2 அல்லது 3 நிமிடங்கள் வரை சூடு செய்து இறக்கி விடுங்கள்.

அடுத்து, இதனை மிதமாக ஆறவிட்டு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது தயார் செய்துள்ள எண்ணெயை முடியின் வேர்க்கால்களில் நன்றாக படும்படி அப்ளை செய்து கொள்ளுங்கள்.

 முடி உதிர்வதை தடுக்க

பிறகு, உங்கள் இரு கைகளினால் வட்ட வடிவில் தலையில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் வரை மசாஜ் செய்து வரலாம். இந்த முறையை நீங்கள் தலை குளிப்பதற்கு முன் பயன்படுத்தலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள எண்ணெய்களில் உங்களுக்கு விருப்பமான ஒரு எண்ணெயை பயன்படுத்தி நீங்கள் மசாஜ் செய்து வரலாம்.

கூந்தல் மற்றும் சரும அழகை பாதுகாக்கும் ஒரே எண்ணெய் உங்களுக்கு தெரியுமா

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement