Heel Crack Home Remedy in Tamil
பொதுவாக ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பாத வெடிப்பு பிரச்சனை உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனை சரி செய்வதற்காக கடைகளில் விற்கப்படும் வேதிப்பொருட்கள் கலந்துள்ள கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் சிறிது காலம் பாத வெடிப்பு மறைந்து மறுபடியும் பாத வெடிப்பு மீண்டும் வர ஆரம்பித்து விடும். அதனால் இந்த பாத வெடிப்பை நம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
How to Heal Cracked Feet Overnight Home Remedies in Tamil:
பாத வெடிப்பினை போக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மெழுகுவர்த்தி – 1
- தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
- வாசலின் – 1 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
- வைட்டமின் E கேப்சூல் – 2
முதலாவதாக நாம் எடுத்து வைத்துள்ள 1 மெழுகுவர்த்தியினை அதன் நடுவில் உள்ள திரியினை நீக்கி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் நறுக்கி வைத்துள்ள மெழுகுவர்த்தி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் வாசலின் ஆகியவற்றை சேர்த்து லேசாக சூடுபடுத்தி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> 2 நாட்களில் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை மறைய வைப்பதற்கு இந்த டிப்ஸ் மட்டும் போதும்
பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இரவு தூங்க செல்வதற்கு முன்னால் உங்களின் பாதத்தை வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்த பிறகு செய்து வைத்துள்ள பேக்கை தடவி இரவு முழுவதும் வைத்து கொள்ளுங்கள்.
இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் பாதவெடிப்பு நீங்குவதை நீங்களே காணலாம்.
How to Heal Cracked Feet Overnight in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மெழுகுவர்த்தி – 1
- கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன்
முதலாவதாக நாம் எடுத்து வைத்துள்ள 1 மெழுகுவர்த்தியினை அதன் நடுவில் உள்ள திரியினை நீக்கி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> 3 நாட்களில் பாதவெடிப்பு முற்றிலும் மறைய இந்த 3 பொருள் மட்டும் போதும்
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் நறுக்கி வைத்துள்ள மெழுகுவர்த்தி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து லேசாக சூடுபடுத்தி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதனை இரவு தூங்க செல்வதற்கு முன்னால் உங்களின் பாதத்தை வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்த பிறகு செய்து வைத்துள்ள பேக்கை தடவி இரவு முழுவதும் வைத்து கொள்ளுங்கள்.
இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் பாதவெடுப்பு நீங்குவதை நீங்களே காணலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |