குளியல் பொடி
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் எப்போது முகத்திற்கும் மற்றும் முடிக்கும் மட்டும் நிறைய வகையான கிரீம், ஹேர் பேக் மற்றும் பவுடரினை பயன் படுத்துவார்கள். அதுமட்டும் இல்லாமல் எப்போதும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக வித விதமான சோப் மற்றும் நறுமணம் உள்ள சென்ட் போன்றவற்றையும் நிறைய பேர் உபயோகப்படுத்தகின்றனர். ஆனால் அதில் நல்ல பலன் கிடைக்கும் என்பது தான் சரியாக தெரியவில்லை. அதனால் இன்றைய பதிவில் 100% Natural முறையில் குளியல் பொடி தயார் செய்து முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் வெள்ளையாக பளபளக்க செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ கால் முட்டியை தொடுகின்ற அளவிற்கு முடி வேண்டுமா.! அப்போ இந்த எண்ணெயை ட்ரை பண்ணுங்க
Kuliyal Podi in Tamil:
குளியல் பொடி அரைக்க தேவையான பொருட்கள்:
- முட்டை- 2
- பாசிப்பயிறு- 1/4 கிலோ
- கஸ்தூரி மஞ்சள்- 2 ஸ்பூன்
குளியல் பொடி தயார் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் எடுத்து வைத்துள்ள 2 முட்டையில் இருக்கும் வெள்ளைக் கருவினை மட்டும் உடைத்து ஊற்றி கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது 1/4 கிலோ பாசிப்பயிறு எடுத்துக்கொண்டு அதில் உடைத்து வைத்துள்ள வெள்ளை கருவினை ஊற்றி நன்றாக கலந்து 2 நாட்கள் வெயிலில் காய வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 3
2 நாட்கள் பொருட்கள் வெயிலில் காய்ந்த பிறகு அதனை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
இப்போது மிக்சியில் இருக்கும் பவுடருடன் 2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து சிறிது நேரம் ஆற விடுங்கள். இப்போது 100% Natural குளியல் பொடி தயாராகிவிட்டது.
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் நீங்கள் தயார் செய்த குளியல் பொடி 2 ஸ்பூன் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொண்டு நீங்கள் உடல் முழுவதும் சோப் போட்டு குளித்த பிறகு இந்த பவுடரை அப்ளை வைத்து விட்டு அதன் பிறகு குளியுங்கள்.
இது மாதிரி வாரத்திற்கு ஒரு முறை குளித்தால் போதும் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு உடல் முழுவதும் வெள்ளையாக மாறி இருக்கும் .
இதையும் படியுங்கள் ⇒ முடி உதிர்வதை நிறுத்தி முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இந்த ஒரு பொருள் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |