நரைமுடி பிரச்சனையா இனி கவலை வேண்டாம் இந்த ஹேர் டையை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

நரைமுடியா கவலை இனி வேண்டாம் இந்த ஹேர் டையை ட்ரை பண்ணுங்க..! Herbal Hair Dye in Tamil

இன்றைய காலகட்டத்தில் 30 வயது எட்டிவிட்டாலே அனைவருக்கும் நரை முடி எட்டிப்பார்க்கிறது. இதனை கருமையாக கடைகளில் விற்பனை செய்யப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்துகின்றன. இதனால் பிற்காலத்தில் அதிக ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆக இயற்கையான முறையில் ஹேர் டை தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. பீட்ரூட் – ஒன்று
  2. மருதாணி பவுடர் – 3 ஸ்பூன்
  3. நெல்லிக்காய் பவுடர் – 3 ஸ்பூன்
  4. டீத்தூள் – 3 ஸ்பூன்
  5. எலுமிச்சை – 1/2 மூடி
  6. அவுரி பொடி – 3 ஸ்பூன்

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
இந்த 1 பொருள் போதும் நரைமுடியை நீக்கிவிடும்

செய்முறை:herbal hair dye

ஸ்டேப்: 1

பீட்ரூட்டை தோல் சீவி துருவிக்கொள்ளுங்கள், பிறகு இரண்டு நாள் காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு காயவைத்த பீட்ரூட்டை மிக்சி ஜாரில் சேர்த்து பவுடர் போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு மூன்று ஸ்பூன் டீத்தூளில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

பின் ஒரு இரும்பு வாணலியை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மருதாணி பவுடர் 3 ஸ்பூன், நெல்லிக்காய் பவுடர் மூன்று ஸ்பூன், அவுரி பொடி மூன்று ஸ்பூன், எலுமிச்சை சாறு 1/2 மூடி மற்றும் வடிகட்டி வைத்துள்ள டீ டிக்காஷனை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

ஸ்டேப்: 4

தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட்டு போல் கலந்துகொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
நரைமுடி நிரந்தரமாக கருப்பாக இயற்கை முறையில் இதை ட்ரை பண்ணுங்க..!

ஸ்டேப்: 5

பின் ஒரு நாள் இரவு முழுவதும்  இந்த கலவையை ஊறவைக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

பிறகு மறுநாள் காலையில் இந்த கலவையை தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஸ்டேப்: 7

ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் தலை அலசலாம், ஆனால் தலைக்கு ஷாம்பு பயன்படுத்த கூடாது. வேண்டும் என்றால் முதல் நாளே தலைக்கு ஷாம்பு போட்டு சுத்தமாக அலசிவிடுங்கள். பிறகு மறுநாள் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்துங்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement